இந்தியா – இங்கிலாந்து (England) இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நான்காவது போட்டி ஜூலை 23, 2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்திய அணி ஒரு மோசமான சாதனையை செய்துள்ளது. தொடர்ந்து 14வது முறையாகவும் டாஸில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இது 1,16, 384 வாய்ப்புகளில் ஒன்று என்ற அபூர்வமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி டாஸ் வெல்வது முக்கியம் என கருதப்பட்ட நிலையில், இன்றும் கேப்டன் சுப்மன் கில் டாஸில் தோற்றது இந்திய அணிக்கு பின்னடைவாக கூறப்படுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து முதலில் களமிறங்கியுள்ள இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேப்டன் சுப்மன் கில் (Subhman Gill) 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
எப்போது கடைசி முறையாக இந்தியா டாஸ் வென்றது?
கடந்த ஜனவரி, 2025ல் ராஜ்கோட்டில் நடைபெற்ற T20 போட்டியில் இந்தியா கடைசியாக டாஸ் வென்றது. அந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று ஆடியது மட்டும் அல்லாமல், 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றும், சிறந்த 4-1 சாதனையுடன் தொடரை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.




இதையும் படிக்க : அடுத்தடுத்து 5 பேருக்கு காயம்.. 4வது டெஸ்டில் இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
இந்தப் போட்டியில் சுப்மன் கில், நான்காவது முறையாக டாஸ் இழந்திருக்கிறார். 1-2 என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியிருக்கும் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் தொடரையும் இழப்பது மட்டுமல்லாமல், கேப்டனாக சுப்மன் கில்லுக்கும் பின்னடைவாக இருக்கும்.
இங்கிலாந்தில் 1000 ரன்களைக் கடந்த ரிஷப் பண்ட்
🚨 𝙈𝙞𝙡𝙚𝙨𝙩𝙤𝙣𝙚 𝘼𝙡𝙚𝙧𝙩 🚨
Rishabh Pant completes 1⃣0⃣0⃣0⃣ Test runs in England! 👍
He also becomes the first wicketkeeper to score 1000-plus runs in away Tests 🔝
Updates ▶️ https://t.co/L1EVgGtx3a#TeamIndia | #ENGvIND | @RishabhPant17 pic.twitter.com/DIR3iseYaQ
— BCCI (@BCCI) July 23, 2025
மறுபுறம், இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அவர் தலைமையிலான அணி, லார்ட்ஸில் நடந்த மூன்றாவது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியுடன் உற்சாகத்தில் இருக்கின்றது. இப்போதும் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் விளையாடிவருகிறது.
இதையும் படிக்க : புதிய மாற்றத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணி தாக்கு பிடிக்குமா..?
முதல் போட்டியில் களமிறங்கும் அன்ஷூல் கம்போஜ்
இந்திய அணியைப் பொறுத்த வரை அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. மேலும் நிதிஷ் குமார ரெட்டி இடது முழங்கால் காயத்தால் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவர்களுக்கு பதிலாக, ஹரியானாவைச் சேர்ந்த 24 வயதான வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் இந்த போட்டியில் களமிறங்குகிறார். அவர், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், ஷார்துல் தாக்கூர் காயம் அடைந்த நிதிஷ்க்கு பதிலாக சேர்க்கப்பட்டு உள்ளார். கருண் நாயர் மீண்டும் வாய்ப்பு இழந்த நிலையில், சாய் சுதர்சன் முதல் போட்டிக்குப் பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.