India vs England Test: இங்கிலாந்து தொடரில் தலா 500 ரன்கள்.. முத்திரை பதித்த கே.எல்.ராகுல் – சுப்மன் கில்!
Gill, Rahul's 500+ Runs: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நான்காவது நாளில், சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் இருவரும் 174 ரன்கள் கூட்டணி அமைத்து இந்திய அணியை மீட்டெடுத்தனர். இந்த தொடரில் கில் மற்றும் ராகுல் இருவரும் 500 ரன்களை கடந்து 55 ஆண்டுகளில் இல்லாத சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (India – England Test Series) இடையிலான 4வது டெஸ்டின் 4வது நாளில் 174 ரன்கள் கூட்டணி அமைத்து, சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் (KL Rahul) இந்திய அணியை மீட்டெடுத்தனர். 311 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறினாலும் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீட்டெடுத்தாலும், 55 ஆண்டுகாலமாக நடக்காத ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்து தொடரில் தலா 500 ரன்கள்:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இதன்மூலம், கடந்த 55 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும். கடைசியாக கடந்த 1970-71 இங்கிலாந்து தொடரில் சுனில் கவாஸ்கர் மற்றும் திலீப் சர்தேசாய் தலா 500 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தனர்.




ALSO READ: டெஸ்டில் முதல் அரைசதத்துடன் முத்தான சாதனைகள்.. இங்கிலாந்துக்கு எதிராக கெத்து காட்டிய சாய் சுதர்சன்!
2வது இந்திய தொடக்க வீரர்:
இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையை கே.எல். ராகுல் பெற்றுள்ளார். அவருக்கு முன்பு, சுனில் கவாஸ்கர் இதைச் செய்திருந்தார். இந்தத் தொடரில் ராகுல் தனது மூன்றாவது சதத்தை எட்டவுள்ளார். முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும், மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் கே.எல். ராகுல் சதம் அடித்தார். இதுவரை அவர் 508 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள்:
5⃣0⃣0⃣ runs (and going strong) in this Test series! 💪
KL Rahul continues his impressive run of form 👌 👌
Updates ▶️ https://t.co/L1EVgGtx3a#TeamIndia | #ENGvIND | @klrahul pic.twitter.com/Iz0F7w6Tsb
— BCCI (@BCCI) July 26, 2025
இந்திய கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த 46 ஆண்டுகால சாதனையை சுப்மான் கில் முறியடிக்க நெருங்கிவிட்டார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டன் சுப்மன் கில் 697 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக சுனில் கவாஸ்கர் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 1978ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 732 ரன்கள் எடுத்தார். கில் தனது இன்னிங்ஸில் இன்னும் 36 ரன்கள் சேர்ப்பதன் மூலம் இந்த 47 ஆண்டுகால சாதனையை முறியடிக்க முடியும்.
தோல்வியை தவிர்க்குமா இந்திய அணி..?
முதல் இன்னிங்சில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் மிகவும் மோசமான தொடக்கத்தையே பெற்றது. முதல் ஓவரின் நான்காவது பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை (0) கிறிஸ் வோக்ஸ் வெளியேற்றினார், ஐந்தாவது பந்தில் சாய் சுதர்ஷனை (0) வெளியேற்றினார். ஆனால் இதன் பிறகு, ராகுல் மற்றும் கில் ஆகியோர் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை காப்பாற்றினர்.
ALSO READ: ரன் மழை பொழியும் இங்கிலாந்து அணி.. பெரும் பின்னடைவில் இந்திய அணி..!
கே.எல். ராகுல் 210 பந்துகளை எதிர்கொண்டு 87 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் கில் 167 பந்துகளை எதிர்கொண்டு 78 ரன்கள் எடுத்துள்ளார், இருவரும் இன்று தங்கள் சதங்களை பதிவு செய்யலாம். இந்தியா இப்போதைக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியாது, ஆனால் தோல்வியைத் தவிர்க்க இன்று நன்றாக பேட்டிங் செய்து டிரா செய்யலாம்.