மதுரையில் ரூ.4,400 கோடி திட்டப் பணிகள் – துவங்கி வைத்த பிரதமர் மோடி
PM Modi In Madurai : மதுரையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார் மேலும், மரக்காணம் - புதுவை பிரிவு, பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
மதுரை, மார்ச் 1 : மதுரையில் மார்ச் 1, 2026 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தமிழ்நாட்டில் ரூ. 4,400 கோடி செலவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்துள்ளார். மதுரையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார் மேலும், மரக்காணம் – புதுவை பிரிவு, பரமக்குடி – ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு
இதனையடுத்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் வரலாறு சிறப்பு மிக்க மாற்றம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேதுறை பல சாதனைகளை படைத்துள்ளது..தமிழ்நாட்டில் 1,300 கி.மீ தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைத்துள்ளோம் என்றார்.
இதையும் படிக்க : “ஓபிஎஸ்-ஐ தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்”.. பியூஸ் கோயல் சரமாரி தாக்கு..
மதுரையில் நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர்
#WATCH | Tamil Nadu | Prime Minister Narendra Modi inaugurates and lays foundation stone for projects Rs 4,400 crore in Madurai pic.twitter.com/JREC63tppL
— ANI (@ANI) March 1, 2026
தமிழ்நாடு வளமான வரலாறு, கலாச்சாரம் கொண்ட மாநிலம். ஆதிச்சநல்லூர் உலக கலாச்சார மையமாக மாற்றப்படும். புலிகட் ஏரி, பொதிகை மலையை சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலா ஏற்படுத்தி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். மேலும் தமிழ்நாட்டிற்கு கடந்த 15 ஆண்டுகளில் நெடுஞ்சாலை துறைக்கு அதிக முதலீடுகளை மத்திய அரசு செய்துள்ளது.
இதையும் படிக்க : மதுரையில் இன்று பிரசாரம்.. சென்னை வந்த பிரதமர் மோடி.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் படி பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடி மதிப்பில் 4 வழிசாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மரக்காணம் – புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ராமேஸ்வரம் – பங்களு மற்றும் தாம்பரம் மங்களூரு இடையே அம்ரி பாரத் சேவைகளை அவர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட 8 ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். மேலும் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே அமைக்கப்பட்ட 4வது ரயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சென்று அங்கு சாமி தரிசனம் செய்யவிருக்கிறார்.