AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவு வாயிலில் பெரியார் படம் அகற்றம்

Periyar Photo Removed : மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிர மடைந்து வருகின்றன. இந்த நிலையில் பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படம் திடீரென அகற்றப்பட்டது சர்ச்சையாகியிருக்கிறது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவு வாயிலில் பெரியார் படம் அகற்றம்
பிரதமர் பங்கேற்கும் மதுரை மதுரை மாநாட்டில் பெரியார் படம் நீக்கம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Feb 2026 18:43 PM IST

மதுரை, பிப்ரவரி 28 : மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்ட பெரியார் படம் அகற்றப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை மண்டேலா நகரில் மார்ச் 1, 2026 அன்று நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவு வாயிலில் பெரியார் படம் அகற்றம்

பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் டெல்லி செங்கோட்டை வடிவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரியார், அண்ணா மற்றும் எம்ஜிஆர் படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் சில மணி நேரங்களில் பெரியாரின் படம் அகற்றப்பட்டது. பாஜக தலைவர்கள் தொடர்ந்து பெரியாரை விமர்சித்து வந்த நிலையில் அவரின் படம் அகற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : சோழ தேசம் செல்லும் தவெக தலைவர் விஜய்… உறுதியானது தேதி…எப்போது தெரியுமா!

மதுரைக்கு மார்ச் 1, 2026 அன்று மாலை வரும் பிரதமர் மோடி முதற்கட்டமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அங்கு மாலை 4 மணி முதல் 4.20 மணிக்கு சாமி தரிசனம் செய்யும் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு கொடுக்கவுள்ளனர். பின்னர் அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்கிறார் இதனையடுத்து திருப்பரங்குன்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ராஜகோபுரம் வழியாக திருவாச்சி மண்டம், கம்பத்தடி மண்டபம் சென்று மூலவர் சுப்பிரமணி சுவாமியை தரிசனம் செய்கிறார். பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி கோவிலுக்குள் செல்வதற்கு ஏதுவாக ராஜ கோபரத்தில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் மீது நடைமேடை அமைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கம்பத்தடி மண்டபத்திலும் பிரதமர் மோடி செல்வதற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

கோவில் வாசலில் இருந்து 15 மீட்டர் தூரத்துக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி தரிசனம் செய்யும் கருவறை முழுவதும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. பின்பு அலுவலக அறை முன் வைக்கப்பட்டுள்ள சிம்மாசனத்தில் அமரும் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படவுள்ளது.

இதையும் படிக்க : அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… வெல்லமண்டி நடராஜன் வரிசையில் கிருஷ்ணமூர்த்தி.. அடுத்து யார்!

பிரதமர் மோடி வருகையையொட்டி பத்கர்களுக்கு தடை விதிக்கப்படாது எனவும் வழக்கம் போல காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு ஒரு மணிக்கு நடை சாத்தப்படும். அதுவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை பிரதமர் மோடி தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் வழக்கம் போல சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us