Asia Cup 2025: ஆசியக் கோப்பையை அதிக முறை வென்ற அணி எது..? முதலிடத்தில் கெத்துக்காட்டும் இந்தியா!
Asia Cup winners: 2025 செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் 2025 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் அட்டவணை, இந்தியா-பாகிஸ்தான் போட்டி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இங்கே உள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளின் வெற்றி வரலாறு மற்றும் ஆசியக் கோப்பை போட்டியின் வரலாறு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

2025 ஆசியக் கோப்பை (Asia Cup 2025) டி20 போட்டி அடுத்த மாதம் அதாவது 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் 2025 செப்டம்பர் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. போட்டி அட்டவணையின்படி, இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) அணிகளுக்கு இடையிலான போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இருப்பினும், இந்திய அணி (Indian Cricket team) இந்த போட்டியில் விளையாடுமா இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கு முன்னதாக, இந்திய அணி வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடும். இந்தநிலையில், ஆசிய கோப்பை வரலாற்றில் எந்த அணி அதிக முறை கோப்பை வென்றுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: மீண்டும் டி20க்கு திரும்பும் கில்.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு..?




அதிக முறை ஆசியக் கோப்பையை வென்ற அணி:
India won the Asia Cup for the 8th time.
– Most by any team in the history. pic.twitter.com/RBc4H6X3Cm
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023
இதுவரை நடைபெற்ற 16 ஆசியக் கோப்பைப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள இலங்கை, அதிக ஆசியக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 15 முறை ஆசியக் கோப்பையில் பங்கேற்றுள்ளன, அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் நான்கு முறை போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
இந்தியாவும் இலங்கையும் தலா ஒரு ஆசிய கோப்பை டி20 பட்டத்தை வென்றுள்ளன. ஆசிய கோப்பை ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் விளையாடப்பட்டு வருகிறது. அடுத்த 2026ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் 2025 ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, ஒருநாள் உலகக் கோப்பை 2023 இல் நடைபெற்றது. அதனால்தான் ஆசிய கோப்பை அந்த ஆண்டு ஒருநாள் வடிவத்தில் விளையாடப்பட்டது.
ALSO READ: ஆசிய கோப்பை இந்திய அணி.. ரிஷப் பண்ட் இடம் பெறமாட்டாரா?
கடந்த 1984ம் ஆண்டு தொடங்கிய ஆசியக் கோப்பையானது 2014ம் ஆண்டு வரை ஒருநாள் வடிவத்தில் விளையாடப்பட்டது. அதன்பிறகு, 2016ம் ஆண்டு முதல் முறையாக ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் விளையாடப்பட்டது. அதனை தொடர்ந்து, 2022ல் மீண்டும் டி20 வடிவத்தில் ஆசியக் கோப்பை விளையாடப்பட்டது. அதேநேரத்தில், 2018 மற்றும் 2023ல் ஆசியக் கோப்பை ஒருநாள் வடிவத்தில் விளையாடப்பட்டது. 2016ம் ஆண்டில் நடந்த ஆசியக் கோப்பையை இந்திய அணியும், 2022ல் நடந்த ஆசியக் கோப்பையை இலங்கை அணியும் வென்றது. ஆசியக் கோப்பையில் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 வடிவங்களையும் சேர்த்து இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.