Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asia Cup 2025: மீண்டும் டி20க்கு திரும்பும் கில்.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு..?

India's Predicted Lineup: 2025 ஆசியக் கோப்பை செப்டம்பர் 9 அன்று தொடங்குகிறது. இந்திய அணி ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படலாம். சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்திய அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. ஆசியக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது.

Asia Cup 2025: மீண்டும் டி20க்கு திரும்பும் கில்.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு..?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Aug 2025 12:35 PM

மிகவும் எதிர்பார்க்கப்படும் 2025 ஆசியக் கோப்பை (Asia Cup 2025) வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கான, இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) 2025 ஆகஸ்ட் 3வது வாரத்தில் அறிவிக்கப்படலாம். இந்த போட்டியின் மூலம் சுப்மன் கில் (Shubman Gill), யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பலாம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த கில், நீண்ட காலமாக இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் சுப்மன் கில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 2025 ஆசியக் கோப்பையில் விளையாடுவதற்காக கில் இந்திய அணிக்கு திரும்புவதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் பெயர்களும் போட்டியில் உள்ளன.

ALSO READ: ஆசியக் கோப்பையில் பும்ரா களமிறங்குவாரா..? பிசிசிஐ முடிவு என்ன..?

ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு:


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவதால் டி20 அணியில் இருந்து விலகி உள்ளார். ஆனால், ஆசிய கோப்பையில் அவர் தேர்வு செய்யப்படுவதையும் பரிசீலிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிய கோப்பை வருகின்ற 2025 செப்டம்பர் 9 முதல் 2025 செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், போட்டியில் மொத்தம் 6 போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும்.

ஆசிய கோப்பையில் டாப் ஆர்டரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் முக்கியமான வீரர்களாக இருக்கலாம். இருப்பினும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் இருப்பு ஒரு பெரிய பிரச்சினையாகும். அணித் தேர்வுக்கு முன் இவர்கள் இருவரின் உடற்தகுதியை பிசிசிஐ சோதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் சிறந்த பார்மில் உள்ளதால், யார் யார் அணியில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ALSO READ: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது…? யாருடன்..? முழு விவரம் இதோ!

2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் அட்டவணை:

2025 ஆசியக் கோப்பையின் குரூப் ஏ-வில் இந்திய கிரிக்கெட் அணி இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் உள்ளன. இந்திய அணியின் முதல் போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக விளையாடுகிறது. இதை தொடர்ந்து, இந்தியா vs பாகிஸ்தான் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி துபாயில் நடைபெறும்.

  • 2025 செப்டம்பர் 10: இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – துபாய் (இரவு 7:30 PM)
  • 2025 செப்டம்பர் 14: இந்தியா vs பாகிஸ்தான் – துபாய் (இரவு 7:30 மணி)
  • 2025 செப்டம்பர் 19: இந்தியா vs ஓமன் – அபுதாபி (இரவு 7:30 மணி)

லீக் ஸ்டேஜ் போட்டிகள் முடிந்ததும், இரு குழுக்களிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 இல் விளையாடும். சூப்பர் 4 இன் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையிலான 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 28ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.