Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England Test Series: கில்லுக்கு 5 முறை மிஸ்! இந்திய அணிக்கு 15 முறை.. தொடர்ச்சியாக ராசியில்லாத டாஸ்..!

Shubman Gill's Toss Losses: சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து டாஸ்களையும் தோற்றுள்ளது. இது 21ஆம் நூற்றாண்டில் ஒரு கேப்டனுக்கு நடந்த முதல் சம்பவம். இதற்கு முன்பு, விராட் கோலி 2018ல் இதேபோன்ற சாதனையை படைத்திருந்தார்.

India vs England Test Series: கில்லுக்கு 5 முறை மிஸ்! இந்திய அணிக்கு 15 முறை.. தொடர்ச்சியாக ராசியில்லாத டாஸ்..!
டாஸை இழந்த சுப்மன் கில்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Jul 2025 17:03 PM

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் (India – England Test Series) கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் (Shubman Gill) தலைமை ஏற்றார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் சுப்மன் கில் டாஸை தோற்றுள்ளார். அதன்படி, இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்டிலும் இங்கிலாந்து (England Cricket Team) டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு அணி அனைத்து டாஸ்களிலும் தோற்றது டெஸ்ட் கிரிக்கெட்டில் இது முதல் முறையல்ல. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு அணி அனைத்து டாஸ்களிலும் தோற்றது என்ற வரலாறு இதுவரை 14வது முறை நடந்துள்ளது.

அதேநேரத்தில், 21 ஆம் நூற்றாண்டில் கடந்த 2018ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இது முதல் முறையாக நடந்தது. அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் டாஸ்களை வென்றிருந்தார். அப்போது, இந்திய அணியின்கேப்டனாக இருந்த விராட் கோலி 5 முறையும் டாஸ்களை இழந்திருந்தார்.

ALSO READ: 2019ல் விராட் கோலியை நீக்க திட்டம் போட்டதா ஆர்சிபி? முன்னாள் ஆல்ரவுண்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

விராட் கோலியை சமன் செய்த கில்:


21 ஆம் நூற்றாண்டில் ஒரு கேப்டனாக விராட் கோலி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைத்து டாஸ்களிலும் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை. 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி 5 டாஸ்களிலும் தோல்வியடைந்ததால் இந்த நூற்றாண்டில் இது முதல் முறையாக நடந்தது. அதனை தொடர்ந்து, 21 ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற மோசமான சாதனையை படைத்த 2வது கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார். அந்த நேரத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் 2025 இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளுக்குப் பிறகு 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

ALSO READ: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!

இந்திய அணிக்கு தொடரும் டாஸ் தோல்வி:


ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 15வது முறையாக டாஸை இழந்துள்ளது. இது தற்போது உலக சாதனையாகும். கடந்த 2025 ஜனவரி 31ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக டாஸை இழந்ததிலிருந்து இந்திய அணியின் டாஸ் தோல்வி தொடர்ச்சி தொடர்ந்து வருகிறது. அதன் பிறகு, இந்திய கிரிக்கெட் அணியால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்பட சர்வதேச போட்டிகளில் ஒரு டாஸைக் கூட வெல்ல முடியவில்லை. இந்தியாவுக்கு முன்பு, அதிக டாஸை இழந்த சாதனை வெஸ்ட் இண்டீஸின் பெயரில் இருந்தது. கடந்த 1999ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக 12 டாஸ்களை இழந்திருந்தது.