Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England Test Series: இதுவரை 18 சதங்களுடன் இன்னும் பல .. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் குவியும் சாதனைகள்!

India-England Test Series Century: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர், பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்தால் வரலாறு படைத்து வருகிறது. சுப்மன் கில் 4 சதங்கள், பென் ஸ்டோக்ஸ் ஒரு சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் என இரு அணிகளும் சாதனை படைத்துள்ளன. மொத்தம் 18 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில், இந்தியா 11 சதங்களுடன் முன்னிலை வகிக்கிறது.

India vs England Test Series: இதுவரை 18 சதங்களுடன் இன்னும் பல .. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் குவியும் சாதனைகள்!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jul 2025 14:46 PM

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் (India – England Test Series) இதுவரை பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் இணைந்து இதற்கு முன்பு, படைக்காத சாதனைகளை படைத்துள்ளனர். அதாவது, ஒரே டெஸ்டின் 400 ரன்களுக்கு மேல் எடுத்து இந்திய கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) வரலாறு படைத்தார். அதேநேரத்தில், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்கள் எடுத்தது மட்டுமின்றி, சதம் அடித்தும் வரலாறு படைத்தார். இப்படி பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் யார் ஆதிக்கம்..?

இங்கிலாந்து மண்ணில் பொதுவாகவே சூழல் மற்றும் பிட்ச் அபந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. அதேநேரத்தில், மேகமூட்டம் காரணமாக பிட்ச்சில் ஸ்விங் மற்றும் சீம் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், வானிலை மழை மற்றும் மேகமூட்டத்துடன் இருந்தது. ஆனால் இந்த கடினமான சூழ்நிலைகளிலும் கூட, பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இதுவரை, இந்தத் தொடரில் மொத்தம் 18 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

ALSO READ: 5 இடது கை பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. டெஸ்ட் வரலாற்றில் புதிய வரலாறு படைத்த இந்திய அணி!

இதுவரை 18 சதங்கள்:


மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்டில் மொத்தம் 5 சதங்கள் அடிக்கப்பட்டன. இதில், 3 சதங்களை இந்திய வீரர்களும், 2 சதங்களை 2 இங்கிலாந்து வீரர்களும் அடித்தனர். இந்தியாவை பொறுத்தவரை 4வது டெஸ்டில் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்தனர். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தனர். இதுவரை இந்தத் தொடரில் மொத்தம் 18 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

இந்த 18 சதங்களில் 11 சதங்களை இந்திய வீரர்களும், 7 சதங்களை இங்கிலாந்து வீரர்களும் பதிவு செய்தனர். இந்த தொடரில் அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் அடித்தார்.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சதமடித்த இந்திய வீரர்கள்:

  • சுப்மன் கில் – 4 சதங்கள்
  • ரிஷப் பண்ட் – 2 சதங்கள்
  • கே.எல். ராகுல் – 2 சதங்கள்
  • ரவீந்திர ஜடேஜா – 1 சதம்
  • வாஷிங்டன் சுந்தர் – 1 சதம்
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 1 சதம்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சதமடித்த இங்கிலாந்து வீரர்கள்:

  • ஜோ ரூட் – 2
  • பென் ஸ்டோக்ஸ் – 1
  • பென் டக்கெட் – 1
  • ஹாரி புரூக் -1
  • ஜேம்ஸ் – 1
  • ஓலி போப் – 1

சதங்கள் அடிப்படையில் இந்திய அணி இங்கிலாந்தை விட முன்னிலையில் உள்ளது. இந்தத் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்னும் நடைபெறவில்லை. இது வருகின்ற 2025 ஜூலை 31ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியில் இன்னும் பல சதங்கள் அடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: 35 ஆண்டுகால சத வறட்சிக்கு முற்றுப்புள்ளி.. சதம் அடித்து சாதனை படைத்த சுப்மன் கில்!

வரலாறு படைக்கப்போகும் சுப்மன் கில்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்டில் சுப்மன் கில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 ரன்கள் எடுத்தால், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது இந்த சாதனை 1978-79ல் 732 ரன்கள் எடுத்த சுனில் கவாஸ்கரின் பெயரில் உள்ளது. இதுவரை விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் மொத்தம் 722 ரன்கள் எடுத்துள்ளார்.