India vs England 5th Test: காயத்தால் வெளியேறிய ரிஷப் பண்ட்.. துருவ் ஜூரெல் – ஜெகதீசனுக்கு இடையே கடும் போட்டி! யாருக்கு வாய்ப்பு?
Rishabh Pant Injury: ரிஷப் பண்ட் காயத்தால் ஐந்தாவது இங்கிலாந்து டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2022ல் லிஸ்ட் A போட்டியில் 277 ரன்கள் அடித்து சாதனை படைத்த ஜெகதீசன், 52 முதல் தர போட்டிகளில் 3373 ரன்கள் எடுத்த அனுபவம் கொண்டவர். இருப்பினும், துருவ் ஜூரெலுக்கும் வாய்ப்புள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் (India – England Test Series) கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கு இடையில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 2 போட்டிகளிலும், இந்திய அணி (Indian Cricket Team) 1 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்டின்போது ந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் (Rishabh Pant) காலில் காயம் ஏற்பட்டது. இந்தநிலையில், ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து, ரிஷப் பண்ட்க்கு பதிலாக தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
யார் இந்த நாராயண் ஜெகதீசன்..?
Narayan Jagadeesan’s first call-up to the Indian cricket team for the 2025 England tour, marking a significant milestone for the Tamil Nadu wicket-keeper batter who set a List A cricket record with a 277-run innings in 2022, showcasing his exceptional talent. pic.twitter.com/JGRYQJnorg
— M R S (@vasannsp048) July 29, 2025
இந்தியா இங்கிலாந்து தொடரில் துணை கேப்டன் ரிஷப் பண்ட்க்கு மாற்று வீரராக தமிழ்நாட்டை சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இடம் பிடித்துள்ளார். நாராயண் ஜெகதீசன் இதுவரை 52 முதல் தர போட்டிகளில் விளையாடி 10 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களுடன் 47.50 சராசரியில் 3,373 ரன்கள் எடுத்துள்ளார். ரிஷப் பந்த் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினால், ஐந்தாவது டெஸ்டின் விளையாடும் பதினொன்றில் இந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம்தான்.




ALSO READ: ஜடேஜா, சுந்தருக்கு தக்க மரியாதையை கொடுக்கவில்லையா..? பென் ஸ்டோக்ஸின் வைரலான வீடியோ பின்னணி..!
துருவ் ஜூரெலுக்கு முன்னுரிமை:
ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெற மாட்டார். முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் பண்ட் காயம் காரணமாக பீல்டிங்போது களமிறங்கவில்லை. எனவே, பண்ட்க்கு பதிலாக துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். ஆனால் ஜூரெல் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஐசிசியின் புதிய விதிகளின்படி, பேட்ஸ்மேனின் தலையில் காயம் இருந்தால் மட்டுமே ஒரு பேட்ஸ்மேனை மாற்ற முடியும். பண்ட் கால் விரலில் காயம் இருந்ததால், ஜூரெல் பேட்டிங் செய்ய வரவில்லை.
ரிஷப் பண்டின் காயத்திற்கு பிறகு, துருவ் ஜூரெல் இந்திய அணி தனது 5வது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் அணியில் இடம்பெறலாம். ஒருவேளை துருவ் ஜூரெலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைத்தால், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் இந்தியாவுக்காக அறிமுகமாகலாம்.
ALSO READ: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது..? மாத வாரியான அட்டவணை இதுதான்!
இங்கிலாந்து டெஸ்ட் அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கணிக்கப்பட்ட இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்