AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

STR 51 படத்தில் சிம்பு உடன் இணைந்து நடிகர் சந்தானம் – வைரலாகும் தகவல்

Santhanam is onboard for the STR 51 movie: தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த இவர் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து நாயகனாக நடித்து வந்த இவர் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சிம்பு உடன் இணைந்து நடிக்க உள்ளது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

STR 51 படத்தில் சிம்பு உடன் இணைந்து நடிகர் சந்தானம் – வைரலாகும் தகவல்
சந்தானம் மற்றும் சிலம்பரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Mar 2026 12:16 PM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்த நடிகர் சந்தானம் பிறகு காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னதாக சின்னத்திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். இதன் காரணமாக சந்தானம் வெள்ளித்திரையில் காமெடியனாக நடித்த போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து தொடர்ந்து பலப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது காமெடிக்காக மட்டுமே பலப் படங்கள் வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சந்தானம் தற்போது தொடர்ந்து பலப் படங்களில் நாயகனாக நடித்து உள்ளார்.

இவர் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக நடித்தப் படங்களும் தொடர்ந்து ரசிகர்கலிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு சந்தானம் காமெடி வேடத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இப்படி இருக்கும் சூழலில் தற்போது நடிகர் சிலம்பரசன் படத்தில் சந்தானம் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வௌர்கின்றது.

STR 51 படத்தில் சிம்பு உடன் இணைந்து நடிகர் சந்தானம்:

முன்னதாக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்க இருந்தப் படத்தில் நடிகர் சந்தானம் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்தப் படம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் 51-வது படமாக உருவாக உள்ள படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்க உள்ளார். படத்திற்கு காட் ஆஃப் லவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… Dhanush: ‘இனிமேலாவது வட சென்னை 2 பற்றி அப்டேட் கேக்காதீங்க’ – தனுஷ் பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

Follow Us