Santhanam : ஆர்யா என் வீட்டை இடிச்சிட்டாரு.. என் அம்மா வீட்டை தேடுனாங்க.. நடிகர் சந்தானம் பேச்சு!
Aryas Hilarious House Demolition Story : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சந்தானம். ஆரம்பத்தில் படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர், அதைத் தொடர்ந்து தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில், அதில் ஆர்யாவைப் பற்றிய அதிர்ச்சியான சம்பவத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.

நடிகர் சந்தானத்தின் (Santhanam) நடிப்பில் மிகவும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகிவரும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). இந்த படத்தில் நடிகர் சந்தானம் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் எஸ். பிரேம் குமார் (S. Prem Kumar) இயக்கியுள்ளார். நடிகர் சந்தானத்தின் இந்த படமானது தில்லுக்கு துட்டு என்ற திரைப்படத்தின் வரிசையில் 4வது பாகமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல நடிகர் ஆர்யா (Arya) தயாரித்துள்ளார். நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) மன்மதன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் . ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராகப் படங்களில் நடித்துவந்த இவர் , தொடர்ந்து சில வருடங்களாகப் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாக்கினார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகனாகவே நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் இவரின் நடிப்பில் வரும் 2025ம் மே 16ம் தேதியில் வெளியாகவுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிம்பு, ஆர்யா மற்றும் சந்தானம் கலந்துகொண்டனர். இதில் மேடையில் பேசிய சந்தானம் ஆர்யாவுடன் நடந்த நகைச்சுவையான சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். தான் வாங்கிய வீட்டையே ஆர்யா இடித்து விட்டார் என்று கூறியுள்ளார். நடிகர் சந்தானம் பேசியது குறித்தது விவரமாகப் பார்க்கலாம்.
நடிகர் ஆர்யாவைப் பற்றி சந்தானம் கூறியது :
#Santhanam & #Arya Atrocities 😂😂 pic.twitter.com/uAYLdz0QUa
— VCD (@VCDtweets) May 6, 2025
சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கதையை இயக்குநரிடம் கேட்டுவிட்டு ஆர்யா மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறினார். மேலும் நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டார். நான் இருக்கும் இடத்தின் அட்ரெஸை அனுப்பிவிட்டேன். அங்குதான் நான் பழைய வீடு ஒன்றை வாங்கியிருந்தேன். அங்கு வந்த ஆர்யா இது யார் வீடு என்று கேட்டார். நானும் உடனே மச்சான் புதியதாக வீடு ஒன்று வாங்கியிருக்கிறேன் என்று கூறினேன். அந்த வீட்டைப் பார்த்த ஆர்யா மச்சன் இது நன்றாக இல்லை என்று கூறினார், பின் வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர், வீடு நன்றாக இல்லை . இதனை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டுவோம் என்று கூறினார். எனக்கு அந்த ஐடியாவே இல்லை, நான் அந்த வீட்டை பழுது பார்த்து அதில் குடும்பத்துடன் குடியேற வேண்டும் என்றுதான் நினைத்தேன். எனது அம்மாவும் , மனைவியும் வெள்ளிக்கிழமை ஆனால் அந்த வீட்டிற்கு வந்து விளக்கு ஏற்றுவார்கள்.
அந்த வீட்டை பார்த்த ஆர்யா இடித்துவிட்டு அருமையாக புதிய வீட்டைக் கட்டலாம் என்று கூறினார். பின் அவரே அவரின் நண்பர் ஒருவரிடம் கூறி வீட்டை இடிக்க ஆள் அனுப்பிவிட்டார். செவ்வாய்க்கிழமை வீட்டை இடிக்க ஆரம்பித்து , வெள்ளிக்கிழமை அந்த இடமே காலியாகிவிட்டது. அன்று எனது அம்மா அங்கு விளக்கு ஏற்றுவதற்காக வந்திருக்கிறார், அவரும் 2, 3 ஏரியா சுத்தி பார்த்துவிட்டு வீட்டை காணும் என்றார். நானும் என் அம்மவிடம் வீட்டை இடித்துவிட்டேன் என்று கூறுவதற்குப் பயந்து எதுவும் சொல்லவில்லை.
அதன் பிறகுதான் எனது அம்மாவிடம் கூறினேன். இந்த மாதிரி ஆர்யா வந்தான் வீட்டை இடிக்கச் சொன்னார் இடித்துவிட்டேன், அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று கூறினேன். எனது அம்மாவும் என்னிடம் படத்தில்தான் நீங்க இருவரும் அப்படி என்றால் நிஜத்திலும் அப்படித்தான் இருக்கிறீர்கள் என்று கூறினார். அன்று எங்கள் நட்பும் உயர்ந்தது என்று நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார்.