சூர்யா46 பட டைட்டில் இதுவா? – இணையத்தில் கசிந்த தகவல்!
Suriya46 Movie Title: தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோவாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் தெலுங்கு மொழியில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் சூர்யா46. இதன் டைட்டில் மற்றும் முதல் போஸ்டர் விரைவில் வெளியாகவும் நிலையில், தற்போது இதன் டைட்டில் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தெலுங்கு மொழியில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் சூர்யா46 (Suriya46). இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியுள்ள நிலையில், சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நாக வம்சி (Naga Vamsi) தயாரித்துள்ளார். இப்படத்தில் லீட் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலமாக தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஏற்கனவே வணங்கான் படத்தில் சில நாட்கள் நடித்திருந்த நிலையில், பின் சில காரணங்களால் சூர்யா மற்றும் மமிதா பைஜூ இருவருமே இதிலிருந்து விலகினார். இந்நிலையில் மீண்டும் சூர்யா46 படத்தின் மூலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கியிருந்த நிலையில், முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை 2026 மார்ச் 2ம் தேதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இதன் டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.




இதையும் படிங்க: அஜித்குமார் குறித்து நெகிழ்ந்து பேசிய ஜிவி பிரகாஷ் குமார் – வைரலாகும் வீடியோ
சூர்யா46 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
A spectacle in the making. 🤩
A presence you can’t ignore. 🔥#Suriya46 Title & First Look unveils TOMORROW at 10:18 AM! 💥💥@Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NavinNooli @NimishRavi @Banglan16034849 #SaiSoujanya pic.twitter.com/wUPZ9UR3Ht— Sithara Entertainments (@SitharaEnts) March 1, 2026
சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் கூட்டணி பட டைட்டில் என்ன :
சூர்யா46 படத்தில் சூர்யா மற்றும் மமிதா பைஜுவுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இது தெலுங்கு இயக்குநர் மற்றும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் திரைப்படமாக இருந்தாலும், இதில் பல தமிழ் நடிகர்கள்தான் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் கி.வி.பிரகாஷ் குமார்தான் இசையமைத்து வருகிறார்.
இதையும் படிங்க: யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
இப்படத்தின் பாடல்கள் இசையமைப்பு பணியை இவர் முடித்ததாக கூறப்படும் நிலையில், பின்னணி இசைக்கான வேலைகள் நடைபெற்றுவருகிறதாம். இப்படமானது ஒரு பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் அமைந்துள்ளதால். இதற்கு “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” என படக்குழு டைட்டில் வைத்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் வெளியானால்தான் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.