சின்னத்திரை ரசிகர்களே ரெடியா? விஜய் டிவியில் புதிதாக தொடங்கும் நிகழ்ச்சி.. முதல் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
Vijay TV New Reality Show : தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக இருந்துவருவது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் புது நிகழ்ச்சி ஒன்று ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுக்கும் நிலையில், எப்போது ஒளிபரப்பாகும் என பார்க்கலாம்.
தமிழில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே மக்கள் மனதில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய் டிவி (Vijay TV). இந்த தொலைக்காட்சியில் சின்னத்திரை சீரியல், பிக் பாஸ் (Bigg Boss) மற்றும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் (Reality shows) நடத்தப்பட்டுவருகிறது. மேலும் இறுதியாக இந்த தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் வெளியாகி டிஆர்பியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வாரம் முழுவதும் வெளியாகிவரும் நிலையில், மேலும் ஒரு புது நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகவுள்ளது. இந்த புது நிகழ்ச்சியை தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேதான் (Priyanka Deshpande) தொகுக்குள்ள நிலையில், இது குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் பெயர் மற்றும் முதல் போட்டியாளர்கள் யார் என அறிவிக்கப்படவில்லை.
அந்த வகையில் தற்போது இந்த புது நிகழ்ச்சி குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புது நிகழ்ச்சிக்கு “ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்” (Happy Wife Happy Life) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முதல் போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர்கள் லிஸ்ட் பதிவு:
View this post on Instagram
இந்த ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப் போட்டியானது கிட்டத்தட்ட மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியைப்போலவே இருக்குமாம். இந்த நிகழ்ச்சியில் கணவன் மனைவியாக கலந்துகொள்வது போல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளர்களாக மூன்று ஜோடிகள் கலந்துகொண்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 9 புகழ் வினோத் மற்றும் அவரின் மனைவி, பிராஜின் மற்றும் சாண்ட்ரா இவர்களை தொடர்ந்து அமீத் மற்றும் அவரின் மனைவி என மொத்தமாக மூன்று ஜோடிகள் இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். இந்த புது நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி முதல் வாரம்தோறும், ஞாயிற்று கிழமை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்து தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப் நிகழ்ச்சி குறித்து வெளியான புரோமோ வீடியோ:
View this post on Instagram
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை போலவே இதுவும், ஜோடியாக விளையாடும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இது ஒளிபரப்பாகவுள்ள நிலையில், மக்களிடையே வரவேற்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.