AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் டெக்ஸ்லா படம்… கவனம் ஈர்க்கும் டீசர்

Texla Movie Title Teaser Tamil | தமிழ் சினிமாவில் சமீபத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்ததன் மூலம் பிரபலமாக உள்ள தயாரிப்பு நிறுவனமான கண்ணா ரவி குரூப்ஸ் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் டெக்ஸ்லா படம்… கவனம் ஈர்க்கும் டீசர்
டெக்ஸ்லாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Feb 2026 14:01 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளாக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 3 என்ற படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹசன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தின் மூலமாகதான் இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் வெளியான பாடல்கள் தற்போது வரை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து 3 படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் மற்றும் ஒரு ஆவணப்படமும் வெளியானது. திரையரங்குகளில் வெளியான அந்த இரண்டு படங்களுமே கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான லால் சலாம் படமும் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்தப் படத்தை இயக்க தயாராகி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் டெக்ஸ்லா படம்:

அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது 4-வதாக உருவாக உள்ள படத்திற்கு டெக்ஸ்லா என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கண்ணன் ரவி குரூப்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இவர்களின் தயாரிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்.. நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு!

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? வைரலாகும் அப்டேட்

Follow Us