AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடுத்தடுத்து பழி வாங்குவோம்.. பயங்கர ஆயுதங்களுடன் சோஷியல் மீடியாவில் ரீல்ஸ்.. சீனில் இறங்கிய சிவகங்கை போலீஸ்!

Sivaganga Two Arrested : சிவகங்கை மாவட்டத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சமூகவலைதளங்களில் அடுத்தடுத்து பழி வாங்குவோம் என்று ரீல்ஸ் வெளியிட்ட கும்பலை சேர்ந்த மேலும் இருவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கு எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார் .

அடுத்தடுத்து பழி வாங்குவோம்.. பயங்கர ஆயுதங்களுடன் சோஷியல் மீடியாவில் ரீல்ஸ்.. சீனில் இறங்கிய சிவகங்கை போலீஸ்!
மாதரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Nov 2026 15:12 PM IST

சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் மேலமங்கலம் பகுதியில் கடந்த மாதம் அக்டோபர் 18- ஆம் தேதி சுள்ளான் மதன் என்ற ரவுடி பழிக்கு பழியாக ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகங்கை எதிரெதிர் ரவுடி கும்பல்களும், அவர்களது ஆதரவாளர்களும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் அடுத்தடுத்து பழிவாங்குவோம் என்ற வன்முறை வசனங்களுடன் ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு சவால் விட்டிருந்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா கவனத்துக்கு சென்றது.

ரீல்ஸ் வெளியிட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

அதன்படி, இந்த விவகாரம் பொது அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியதை அடுத்து எஸ்.பி. உத்தரவின் அடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், வீடியோ காட்சிகள் பதிவிடப்பட்ட சமூக வலைதள கணக்குகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், வன்முறையை தூண்டியதாக தற்போது வரை 34 எஃப். ஐ. ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட ரிஷி ராஜா ( 19 வயது) மற்றும் கவி சரண் ( 18 வயது) ஆகிய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் படிக்க: தவெகவின் தற்குறி நிர்வாகமே வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.. குதிரை பேர குற்றச்சாட்டில் நீலி கண்ணீர் வடிக்க வெட்கமா இல்லையா.. பொங்கிய டிடிவி தினகரன்!

210 சமூக வலைதள கணக்குகள் மூடக்கம்

இவர்களுடன் சேர்த்து இந்த சம்பவத்தில் தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைதானவர்களில் 2 சிறுவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மட்டும் இன்றி வன்முறையே பரப்பும் விதமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்ட 210 சமூக வலைதள கணக்குகளை போலீசார் அகதியாக முடக்கினர். சோசியல் மீடியாக்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக ஆயுதங்களை ஏந்தி வன்முறையை தூண்டும் வகையில் ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிடக்கூடாது.

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

அதை மீறி பதிவிட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பி. என். எஸ். சட்டத்தின் படி ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் இதுபோன்று சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில் தலை சிதறும் என்று பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்கனும்.. ரூ. 15 கோடி தரோம் அதிமுகவுக்கு வாங்க.. முஸ்தபா எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!

Follow Us