Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India Cricket Team Schedule 2025: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது..? மாத வாரியான அட்டவணை இதுதான்!

Asia Cup 2025: 2025ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆசியக் கோப்பை 2025 செப்டம்பரில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறும். வங்கதேசத்துடன் டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

India Cricket Team Schedule 2025: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது..? மாத வாரியான அட்டவணை இதுதான்!
இந்திய அணிImage Source: GETTY
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jul 2025 15:33 PM

2025ம் ஆண்டில் இதுவரை கிட்டத்தட்ட 7 மாதங்கள் முடிவடைய போகிறது.இந்திய கிரிக்கெட் அணி 2025ம் ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தோல்வியுடன் தொடங்கினாலும், அதன்பிறகு நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடர், 2025 சாம்பியன்ஸ் டிராபியை (2025 ICC Champions Trophy) வென்றது. 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இருப்பினும், தற்போதைய இங்கிலாந்து தொடரில் இந்தியா இன்னும் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. ஆனால் (India – England Test Series) இங்கிலாந்து தொடருக்குப் பிறகு, இந்திய அணி மீதமுள்ள இங்கிலாந்து தொடருக்குப் பிறகு, இந்திய அணி வங்கதேசத்திற்கு பறக்க இருந்தது.

சுப்மன் கில் தலைமையிலான அணி இங்கு டெஸ்ட் தொடரில் விளையாடவிருந்தது. ஆனால், ஒரு சில தனிப்பட்ட காரணத்திற்காக வங்கதேசத்திற்கு எதிரான இந்திய தொடரில் விளையாடாதது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, 2025 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு எந்த சர்வதேச அட்டவணையும் இருக்காது.

ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் மோதலில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆதரவு தெரிவித்த சவுரவ் கங்குலி!

இந்திய அணியின் அடுத்த அட்டவணை என்ன..?


இந்தியாவின் அடுத்த அட்டவணை 2025 ஆசியக் கோப்பைதான். இது வருகின்ற 2025 செப்டம்பர் 9 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆசியக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பைக்குப் பிறகு , இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 2 ம் தேதி அகமதாபாத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 2025 அக்டோபர் 10 முதல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனிலும் நடைபெற உள்ளது.

ALSO READ: ஆசியக் கோப்பை 2025 தொடங்கும் தேதி அறிவிப்பு.. உறுதி செய்யப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்து விளையாடும். இந்த டெஸ்ட் தொடர் வருகின்ற 2025 நவம்பர் 14ம் தேதி தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் வருகின்ற 2025 நவம்பர் 22 முதல் குவாஹாட்டியில் நடைபெறும். இதனை தொடர்ந்து, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் 2025 டிசம்பரில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும். அதன் பிறகு, தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடும்.