Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England 5th Test: வெளியேறிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்..! புது கேப்டனுக்கு கீழ் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு சாதகமா?

England 5th Test Squad: இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன் மற்றும் பிரைடன் கார்சி ஆகியோர் அணியில் இல்லை. ஓலி போப் கேப்டனாக பொறுப்பேற்கிறார்.

India vs England 5th Test: வெளியேறிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்..! புது கேப்டனுக்கு கீழ் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு சாதகமா?
இங்கிலாந்து அணிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Jul 2025 08:00 AM IST

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் (India – England Test Series) தொடரில் இங்கிலாந்து அணி தற்போது 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று அதாவது 2025 ஜூலை 31 முதல் 2025 ஆகஸ்ட் 4 வரை லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் (Oval Cricket Ground) நடைபெறும். தொடரை இழக்காமல் இருக்க, எப்படியாவது இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த டெஸ்ட் போட்டி டிராவானாலும், தொடரை இங்கிலாந்து அணியே வெல்லும். இந்தநிலையில், இந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கான தங்கள் ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து (England Cricket Team) அறிவித்துள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன் மற்றும் பிரைடன் கார்சி உட்பட மொத்தம் நான்கு வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை.

அதேநேரத்தில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஓலி போப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். மேலும் அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் இல்லை. இதற்கு எதிராக, இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்லலாம்.

ALSO READ: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?

வெளியேறிய முக்கிய வீரர்கள்:

இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்னவென்றால், 5வது டெஸ்டில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டுள்ளார். அவர் இல்லாத நிலையில், இளம் பேட்ஸ்மேன் ஒல்லி போப் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார். ஸ்டோக்ஸுக்கு பதிலாக இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜேக்கப் பெதெல்லுக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் இந்த டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஆர்ச்சருக்குப் பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டோங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள்:

இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை தங்கள் ஆடும் லெவன் அணியில் சேர்த்துள்ளது. ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளரை கூட சேர்க்கவில்லை. இந்த முடிவு பல கிரிக்கெட் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டியின் இறுதி நாட்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும். மறுபுறம், இந்திய அணி இந்த போட்டியில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கக்கூடும். இது இங்கிலாந்துக்கு சவாலாக இருக்கலாம்.

ALSO READ: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.