India’s Kennington Oval Record: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?
India vs England 5th Test: இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டி கென்னிங்டன் ஓவலில் நடைபெறவுள்ளது. ஓவலில் இந்தியாவின் வெற்றி விகிதம் குறைவு என்றாலும், 2021ல் விராட் கோலி தலைமையிலான அணி பெற்ற வெற்றி நம்பிக்கை அளிக்கிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, தொடரை சமன் செய்ய ஓவல் டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் (India -England Test Series) கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துவிட்டன. இதில், இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 2 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், இரு அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தநிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 ஜூலை 31ம் தேதி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் (Kennington Oval Cricket Ground) நடைபெறுகிறது. சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான அணி இந்தத் தொடரில் தோற்காமல் இருக்க 5வது டெஸ்டில் வெற்றி பெறுவது முக்கியது. அப்போதுதான், இந்திய அணி 2-2 என போட்டியை சமன் செய்யும். இப்படியான சூழலில், ஓவல் மைதானத்தில் இந்தியாவின் சாதனை எப்படி உள்ளது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.




ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி இருக்கிறது?
இந்தியா தனது முதல் போட்டியை 1936ம் ஆண்டு லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடியது. அதன் பிறகு, இந்திய அணி இந்த மைதானத்தில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இந்தியா இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மீதமுள்ள 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
ஓவலில் இந்தியா எப்போது வென்றது?
India’s Next Test at Kennington Oval, London
In the last 50 years, India has won only one Test match at this venue 😮
That historic win came under Virat Kohli’s captaincy in 2021 with Rohit Sharma Winning the M.O.M award. pic.twitter.com/Rlf95itrB3
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) July 29, 2025
கடைசியாக 2021ம் ஆண்டு விராட் கோலி தலைமையில் கென்னிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா வெற்றி பெற்றது . அப்போது இந்த மைதானத்தில் இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 1971 ஆம் ஆண்டு அஜித் வடேகர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோது, ஓவலில் இந்தியா தனது முதல் வெற்றியைப் பெற்றது. அந்த நேரத்தில் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ALSO READ: இந்திய அணியின் 5வது டெஸ்ட் லெவன்.. பண்ட் இடத்திற்கு யார்? பும்ரா விளையாடுவாரா?
இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், கே.எல். ராகுல், துருவ் ஜூரல், என்.ஜெகதீசன், ஜஸ்பிரீத் பும்ரா , முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், அர்ஷ்தீப், அன்ஷூல் கம்போஜ், குல்தீப் யாதவ்
இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் க்ரௌலி, ஓலி போப், ஜோ ரூட் (துணை கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெதெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டோங்கு மற்றும் கிறிஸ் வோக்ஸ்.