Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England 5th Test: இந்திய அணியின் 5வது டெஸ்ட் லெவன்.. பண்ட் இடத்திற்கு யார்? பும்ரா விளையாடுவாரா?

India playing XI: இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ரிஷப் பண்டின் காயம் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் கலந்துகொள்ளுதல் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. பண்ட்க்கு பதிலாக நாராயண் ஜெகதீஷன் அல்லது துருவ் ஜூரெல் விளையாட வாய்ப்புள்ளது.

India vs England 5th Test: இந்திய அணியின் 5வது டெஸ்ட் லெவன்.. பண்ட் இடத்திற்கு யார்? பும்ரா விளையாடுவாரா?
இந்திய அணிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jul 2025 17:47 PM

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில், இங்கிலாந்து அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி (India vs England 5th Test) கென்னிங்டன் ஓவலில் நடைபெறுகிறது. இந்த போட்டி வருகின்ற 2025 ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது. டெண்டுல்கர்-ஆண்டர்சன் டிராபி என்று அழைக்கப்படும் இந்த தொடரின் இந்த கடைசி போட்டியில் இந்தியாவின் (Indian Cricket Team) விளையாடும் லெவன் அணியில் பல பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) இந்த தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், எனவே பும்ரா ஐந்தாவது டெஸ்டில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. அதேநேரத்தில், ரிஷப் பண்ட் காயம் காரணமாக 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

ரிஷப் பண்ட்க்கு பதிலாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட்க்கு வலது கால் கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடைசி டெஸ்டுக்கு முன்பு ரிஷப் பண்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து, பண்ட்க்கு பதிலாக நாராயண் ஜெகதீஷன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், ரிஷப் பண்ட்க்கு பந்திற்கு துருவ் ஜூரெல் விளையாடும் லெவன் அணியில் இடம் பெறலாம். பண்ட் காயம் காரணமாக ஓய்வு எடுத்தபோது, நான்காவது டெஸ்டில் துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பிங் செய்வதைப் பார்த்தோம்.

ALSO READ: இதுவரை 18 சதங்களுடன் இன்னும் பல .. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் குவியும் சாதனைகள்!

ஜஸ்பிரித் பும்ரா வெளியேறுவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா மூன்றில் மட்டுமே விளையாடுவார் என்று பிசிசிஐ நிர்வாகம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது. இந்தத் தொடரின் மூன்று போட்டிகளில் இதுவரை பும்ரா விளையாடியுள்ளார். எனவே, ஐந்தாவது போட்டியில், பும்ரா விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்படலாம். மேலும் அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு டெஸ்ட் அறிமுக வாய்ப்பு கிடைக்கலாம்.

ALSO READ: காயத்தால் வெளியேறிய ரிஷப் பண்ட்.. துருவ் ஜூரெல் – ஜெகதீசனுக்கு இடையே கடும் போட்டி! யாருக்கு வாய்ப்பு?

குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

மான்செஸ்டர் டெஸ்டில் அன்ஷுல் கம்போஜ் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. முதல் டெஸ்ட் முதல் நான்காவது டெஸ்ட் வரை, குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர்ந்து ஒரு வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் அன்ஷுல் கம்போஜூக்கு பதிலாக குல்தீப் யாதவை சேர்க்கலாம். இதில், களமிறங்குவதன்மூலம் குல்தீப் யாதவ் அணிக்காக விக்கெட் வீழ்த்துவதில் சிறந்த வீரராக தன்னை நிரூபிக்க முடியும்.