Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?

Oval History: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி 2025 ஜூலை 31 முதல் 2025 ஆகஸ்ட் 4 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது.

India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
இந்தியா - இங்கிலாந்துImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Jul 2025 13:47 PM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் (India – England 5th Test) கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளன. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியானது வருகின்ற 2025 ஜூலை 31 முதல் லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் (Oval Cricket Ground) நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) வெற்றி பெற்றால், தொடர் 2-2 என சமநிலையில் முடியும். மறுபுறம், இங்கிலாந்து இந்த டெஸ்டில் வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ, தொடரை இங்கிலாந்து அணி வெல்லும்.

கென்னிங்டன் ஓவல் ஸ்டேடியம்:

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி வருகின்ற 2025 ஜூலை 31 முதல் 2025 ஆகஸ்ட் 4 வரை லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் நடைபெறுகிறது. இந்திய அணி இதுவரை இந்த மைதானத்தில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை 1936 இல் இங்கு விளையாடியது.

ALSO READ: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?

ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது கடினம்:


இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்டில் இரண்டு நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணி விளையாடலாம். காயம் காரணமாக இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஐந்தாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, துருவ் ஜூரெல் விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்படலாம். அதேபோல், ஐந்தாவது டெஸ்டில் பும்ரா விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது. இது தவிர, ஷர்துல் தாக்கூர் மற்றும் அன்ஷுல் காம்போஜ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படலாம். அதன்படி, ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி பல மாற்றங்களுடன் 5வது டெஸ்டில் களமிறங்கலாம்.

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியை அறிவித்துள்ளது. இங்கிலாந்து 15 வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் இங்கிலாந்து லெவன் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக கஸ் அட்கின்சன் அணியில் களமிறங்கலாம்.

ALSO READ: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?

5வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டோங் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.

5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ், கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், அர்ஷ்தீப் சிங், நாராயண் ஜெகதீசன், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் குல்தீப் யாதவ்.