Jasprit Bumrah: 2025 ஆசியக் கோப்பையில் பும்ரா களமிறங்குவாரா..? பிசிசிஐ முடிவு என்ன..?
Asia Cup 2025: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பணிச்சுமை மேலாண்மை காரணமாக சமீபத்திய டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. ஆனால், 2025 ஆசியக் கோப்பையில் அவர் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் பும்ரா, பிசிசிஐயின் கண்காணிப்பில் விளையாடுவார்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கொண்ட இங்கிலாந்து சுற்றுப்பயணம் (India – England Test Series) தற்போது முடிந்துவிட்டது. இதன்பிறகு, இந்திய அணி கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஓய்வில் இருக்கப்போகிறது. இதனைதொடர்ந்து, இந்திய அணி வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் 2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை தயார்படுத்த பிசிசிஐ (BCCI) தீவிர கண்காணிப்பில் உள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பயிற்சியின்கீழ், டி20 வடிவத்தில் நடைபெறும் 2025 ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல முயற்சிக்கும். அதேநேரத்தில், ஆசியக் கோப்பை 2025ல் பும்ரா பணிச்சுமை காரணமாக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. தற்போது, இதற்கான விடை கிடைத்துள்ளது.
ALSO READ: தொடரை சமன் செய்து சாதனையை குவித்த இந்தியா.. அடுக்கப்பட்ட ரெக்கார்ட்ஸ் லிஸ்ட்!




பும்ரா விளையாடுவாரா..?
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பணிச்சுமை மேலாண்மை காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனுடன், ஜஸ்பிரித் பும்ரா 2025 ஆசியக் கோப்பையிலிருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இப்படியான சூழ்நிலையில் 2025 ஆசியக் கோப்பையில் பும்ரா களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
ஜஸ்பிரித் பும்ரா கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடினார். இதன்பிறகு, கடந்த 15 மாதங்களுக்கு மேலாக பும்ரா சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய ரசிகர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் பும்ராவை காண இருக்கிறார்கள்.
ALSO READ: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது…? யாருடன்..? முழு விவரம் இதோ!
அடிக்கடி ஏற்படும் முதுகு வலி:
My Playing XI for Asia Cup 2025
Sanju Samson (WK)
Yashasvi Jaiswal
Tilak Varma/ Abhishek Sharma
SuryaKumar Yadav (C)
Hardik Pandya
Rinku Singh
Axar Patel
Washington Sundar
Varun Chakaravarthy
Jasprit Bumrah
Arshdeep Singh pic.twitter.com/wUqtoevcOF— Aditya Soni (@imAdsoni) July 29, 2025
கடந்த சில வருடங்களாகவே ஜஸ்பிரித் பும்ரா முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, ஆஸ்திரேலியாவில் 2 முறை அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். இதன் காரணமாக, பிசிசிஐ பும்ராவை மிகவும் கவனமுடன் விளையாட வைத்து, கண்காணித்தும் வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் கூட இந்திய அணிக்காக பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதேநேரத்தில், பிசிசிஐ பும்ரா டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட வைக்கவே அதிகம் விரும்புகிறது. அதன்படி, 2025 ஆசிய கோப்பைக்குப் பிறகு, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலும் பும்ரா விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.