Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asia Cup 2025: 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ. 16 லட்சம் பணம்.. களைகட்ட தொடங்கிய 2025 ஆசியக் கோப்பை..!

Asia Cup 2025 Ad Rates Soar: 2025 ஆசியக் கோப்பைக்கான விளம்பர விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்திய போட்டிகளுக்கான 10 வினாடி தொலைக்காட்சி விளம்பரத்திற்கு ரூ.14 முதல் 16 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்துள்ளது. டிஜிட்டல் விளம்பரங்களுக்கான விலையும் அதிகமாகவே உள்ளது.

Asia Cup 2025: 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ. 16 லட்சம் பணம்.. களைகட்ட தொடங்கிய 2025 ஆசியக் கோப்பை..!
இந்தியா - பாகிஸ்தான்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Aug 2025 17:02 PM

2025 ஆசிய கோப்பையின்போது தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களுக்கான விளம்பர விலைகள் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான 2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) மோதலை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, 2031 வரை ஊடக உரிமைகளை பெற்றிருக்கும் இந்தியாவின் ஒளிபரப்பாளர்களான சோனி (Sony) பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, இந்திய போட்டிகளுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களை வெறும் 10 வினாடிகளுக்கு ரூ. 14 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை விலை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஆசிய கோப்பைக்கான விளம்பர தொகுப்புகளின் விலை:


கிடைத்த தகவலின்படி, தொலைக்காட்சி விளம்பர தொகுப்புகளில் கோ பிரசெண்டிங் ஸ்பான்சர்ஷிப் தொகுப்புக்கு ரூ. 18 கோடியும், அதே நேரத்தில் கோ ஸ்பான்சர்ஷிப்புக்கு ரூ. 13 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்பாட் – பை தொகுப்பில் இந்தியா மற்றும் இந்தியா அல்லாத போட்டிகளுக்கு 10 வினாடிகளுக்கு ரூ. 16 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.

ALSO READ: கில்லை விட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு.. ஆசியக் கோப்பையில் இடமில்லையா..? முன்னாள் இந்திய வீரர் கருத்து!

Sony LIV இல் டிஜிட்டல் சலுகைகள்:

  • கோ பிரசெண்டிங் மற்றும் சிறப்பம்சங்கள் கூட்டாளர்: தலா ரூ. 30 கோடி
  • அனைத்து டிஜிட்டல் விளம்பரங்களிலும் 30% இந்திய போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முன் பதிவுகள்: 10 வினாடிகளுக்கு ரூ. 275 (இந்திய போட்டிகளுக்கு ரூ.500; இந்தியா-பாகிஸ்தானுக்கு ரூ.750)
  • மிட்-ரோல்ஸ்: ரூ.225 (இந்திய போட்டிகளுக்கு ரூ.400; இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கு ரூ.600)
  • இணைக்கப்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்கள்: ரூ.450 (இந்திய போட்டிகளுக்கு ரூ.800; இந்தியா-பாகிஸ்தானுக்கு ரூ.1,200)

2025 ஆசியக் கோப்பை:

மிகவும் எதிர்பார்க்கப்படும் 2025 ஆசியக் கோப்பையானது வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் தொடங்குகிறது. முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியானது 2025 செப்டம்பர் 14ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

ALSO READ: ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம்.. இத்தனை வெற்றி கண்டதா இந்திய அணி..?

2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் அட்டவணை:


2025 செப்டம்பர் 10: இந்தியா – யுஏஇ (துபாய்)
2025 செப்டம்பர் 14: இந்தியா – பாகிஸ்தான் (துபாய்)
2025 செப்டம்பர் 19: இந்தியா – ஓமன் (அபுதாபி)

2025 ஆசியக் கோப்பையின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.