Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு வேண்டாம்! 5 வீரர்களுக்கு வாய்ப்பை மறுத்த பிசிசிஐ.. காரணம் என்ன?

Team India squad for the West Indies: வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை. இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்ட பிறகு, வெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்படாததால் 5 வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு வேண்டாம்! 5 வீரர்களுக்கு வாய்ப்பை மறுத்த பிசிசிஐ.. காரணம் என்ன?
இந்திய கிரிக்கெட் வீரர்கள்Image Source: PTI and Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Sep 2025 14:45 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி (IND vs WI) இன்று அதாவது 2025 செப்டம்பர் 25ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு சுப்மன் கில் (Shubman Gill) கேப்டனாக தலைமை தாங்கும் நிலையில், ரிஷப் பண்ட் இல்லாத காரணத்தினால் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை. இருப்பினும், இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு, வெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்படாததால் ஐந்து வீரர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்த ஐந்து வீரர்கள் யார் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

கருண் நாயர்:


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்படாத பெயர் கருண் நாயர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சேர்க்கப்பட்ட கருண் நாயர், இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். எதிர்பாராத அளவிற்கு கருண் நாயர் செயல்படாததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ALSO READ: பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக புகார்.. ஐசிசியிடம் முறையிட்ட பிசிசிஐ!

அபிமன்யு ஈஸ்வரன்:

இந்திய அணிக்காக நீண்ட நாட்களாக பேக் அப் வீரராக இருந்து வந்த அபிமன்யு ஈஸ்வரனுக்கு இந்த முறை அணியில் கூட சேர்க்கப்படவில்லை. வலது கை பேட்ஸ்மேனான அபிமன்யு ஈஸ்வரன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உள்நாட்டுத் தொடரில் மூன்றாவது தொடக்க வீரர் தேவையில்லை என்றும், விரைவில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்திய தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.

ஷர்துல் தாக்கூர்:

ஷர்துல் தாக்கூர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஷர்துல் தாக்கூர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரத்தில், அவரது பேட்டிங் செயல்திறனும் மோசமாக இருந்தது. இதன் விளைவாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆகாஷ் தீப்:

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் ஆகாஷ் தீப் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடர் டிராவிற்கு வெஸ்ட் இண்டீஸ் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் பிரசித் கிருஷ்ணா அவரை விட சிறப்பாக விளையாடுவார் என்று நம்பிக்கை கொண்டு இந்திய அணி எடுத்துள்ளது. ஆகாஷ் தீப் இப்போது இரானி டிராபியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.

அன்ஷுல் காம்போஜ்:

வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் காம்போஜ் மான்செஸ்டர் டெஸ்டில் அறிமுகமானார். அந்த டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அதன்பிறகு, மற்ற போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்… இந்திய அணி அறிவிப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் அவரது உடற்தகுதியைக் காரணம் காட்டி, அவர் ரெட் பால் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு முடிவை எடுத்துள்ளார். தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், ஷ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதியுடன் இருந்திருந்தால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடியிருப்பார் என்று தெரிவித்தார்.