Virat Kohli Fitness Test: உடற்தகுதி தேர்வில் விராட் கோலிக்கு விலக்கா..? மீண்டும் இந்திய அணியில் விஐபி சலுகையா?
India Cricket Fitness Tests: பெங்களூரில் உள்ள பிசிசிஐயின் புதிய மையத்தில் பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், விராட் கோலியின் சோதனை இங்கிலாந்தில் உள்ள லண்டனில் நடத்தப்பட்டது. இது விஐபி சலுகை குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma), டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் புதிய சிறப்பு மையத்தில் உடற்தகுதி சோதனையை மேற்கொண்டனர். இதற்கிடையில், லண்டனில் உள்ள விராட் கோலிக்கு (Virat Kohli) உடற்தகுதியில் விலக்கு அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. அதன்படி, இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்ததாக கூறப்பட்டது. ஆனால், விராட் கோலிக்கு அப்படி எதுவும் விலகு அளிக்கப்படவில்லை என்றாலும், இங்கிலாந்து நாட்டில் உடற்தகுதி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி உடற்தகுதியில் தேர்ச்சியா..?
டைனிக் ஜாக்ரனில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விராட் கோலியின் உடற்தகுதி சோதனை இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்டுள்ளது. விராட் கோலியை தவிர வேறு எந்தவொரு இந்திய வீரரும் சோதனை மேற்கொள்ளவில்லை. ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்ட பெரும்பாலான வீரர் பெங்களூருவில் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றநிலையில், இன்னும் பரிசோதனை மேற்கொள்ளாத சில வீரர்களும் உள்ளனர். அதன்படி கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் உடற்தகுதி சோதனை மேற்கொள்ளவில்லை.




ALSO READ: ரோஹித், கோலிக்கு விரைவில் பிரியாவிடையா..? பிசிசிஐ விளக்கம்..!
லண்டனில் விராட் கோலி:
🚨 In a rare move, BCCI conducted Virat Kohli’s fitness test in LONDON 🤯
~ Perhaps first-time in Indian Cricket History that a player got such luxurious treatment. pic.twitter.com/oPu2gf3A46— RCBXTRA (@RCBXTRAOFFICIAL) September 3, 2025
விராட் கோலி நீண்ட காலமாக தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் இருந்தும், கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இருப்பினும், இங்கிலாந்தில் விராட் கோலி உடற்தகுதி சோதனை நடத்தியது இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் விஐபி கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும், விராட் கோலி இதற்கு நிச்சயமாக பிசிசிஐயிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். வீரர்களின் உடற்தகுதி அறிக்கை பிசியோவால் பிசிசிஐக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ALSO READ: ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் யாதவ்!
உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றவர் யார்..?
பிசிசிஐ நடத்திய உடற்தகுதி தேர்வில் இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ், ஜிதேஷ் சர்மா, பிரசித் கிருஷ்ணா, ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், சிவம் துபே, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, முகேஷ் குமார், ஹர்திக் பாண்டியா, சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, அபிமன்யு ஈஸ்வரன், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், துருவ் ஜூரல், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.