Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் அனுபவம் பலத்துடன் களம்.. ரஷீத் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
Asia Cup Afghanistan Squad: 2025 ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 40 வயதான அனுபவமிக்க முகமது நபியும் அணியில் இடம்பெற்றுள்ளார். செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில், ஆப்கானிஸ்தான் குரூப் பி-யில் வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளுடன் இணைந்துள்ளது.

2025 ஆசிய கோப்பைக்கான (2024 Asia Cup) 17 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷீத் கான் (Rashid Khan) நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ் 40 வயதான மிகவும் அனுபவமிக்க முகமது நபியும் (Mohammad Nabi) இடம்பெற்றுள்ளார். 2025 ஆசிய கோப்பையானது வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி குரூப் பி-யில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குரூப்பில் வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளது. ரஷீத் கான் தலைமையிலான இந்த அணி சூப்பர் 4-க்குள் நுழையும் திறனைக் கொண்டுள்ளது. ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானின் முதல் போட்டி ஹாங்காங் அணியுடன் நடக்கிறது.
2025 ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் வீரர்கள்:
ரஷீத் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், முகமது இஷாக், முஜீப் உர் ரஹ்மான், ஏ.எம். கஹோர்ஸான், ஏ.எம். மாலிக், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.




ரிசர்வ் வீரர்கள்: வஃபியுல்லா தாரகேல், நங்யால் கரோட், அப்துல்லா அஹ்மத்சாய்.
ALSO READ: ஆசியக் கோப்பையை அதிக முறை வென்ற அணி எது..? முதலிடத்தில் கெத்துக்காட்டும் இந்தியா!
ரஷீத் கான் அனுபவம் வாய்ந்த கேப்டன்:
𝐒𝐐𝐔𝐀𝐃 𝐀𝐋𝐄𝐑𝐓! 🚨
Here’s AfghanAtalan’s Squad for the ACC Men’s T20 Asia Cup 2025, which is all set to be held from September 9 to 28 in the UAE. 🤩
Prior to the Asia Cup, AfghanAtalan will also face the hosts UAE and Pakistan in a T20I Tri-Nation Series, starting this… pic.twitter.com/5uxXUxKMma
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 24, 2025
ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷீத் கான் டி20 கிரிக்கெட்டில் நிறைய அனுபவம் உண்டு. இந்தியாவில் ஐபிஎல் உள்பட உலகெங்கிலும் உள்ள பல லீக் கிரிக்கெட்டுகளில் ரஷீத் கானுக்கு விளையாடியது மட்டுமின்றி, ஒரு சில அணிகளுக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அவரது அனுபவம் ஆப்கானிஸ்தான் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். ரஷீத் கான் இதுவரை 96 சர்வதேச டி20 போட்டிகளில் 161 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுமட்டுமின்றி, முக்கியமான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையும் ரஷீத் கானுக்கு உண்டு.
ஆப்கானிஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள்:
ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் 66 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் குர்பாஸ் 1683 ரன்கள் எடுத்துள்ளார். தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 44 டி20 போட்டிகளில் 1105 ரன்கள் எடுத்துள்ளார். ஆல்ரவுண்டர் அசாம்துல்லா உமர்சாயும் அனுபவம் வாய்ந்தவர். இவர் 47 டி20 போட்டிகளில் 474 ரன்களும் 31 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
40 வயதான முகமது நபி:
40 வயதான முகமது நபியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது நபி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 132 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் நபி 2237 ரன்களையும் 97 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அணியில் சேர்க்கப்பட்டுள்ள பேட்ஸ்மேன் ஆல்ரவுண்டர் குல்படின் நைப் தனது வாழ்க்கையில் 75 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், நப் 945 ரன்களையும் 33 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஆசிய கோப்பையில் முஜீப் உர் ரஹ்மான் முக்கிய பங்கு வகிப்பார். பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் 49 டி20 போட்டிகள் உட்பட 125 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 49 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.