Asia Cup 2025: காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார் யாதவ்.. ஆசியக் கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டன் யார்?
Suryakumar Yadav's Captaincy: சூர்யகுமார் யாதவ் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா காயத்திலிருந்து குணமடைந்து 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த இரண்டு வாரங்களில் முழுமையாக குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 2025 செப்டம்பர் முதல் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறது

2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த மிகப்பெரிய போட்டியானது ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2025 ஆசியக் கோப்பை தொடங்குவதற்கு முன் உள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்திய அணியின் கேப்டன் யார் என்பதுதான். இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) சிகிச்சை பெற்று வருவதால், அடுத்த கேப்டன் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
குடலிறக்கத்தால் அவதிப்படும் சூர்யகுமார் யாதவ்:
🚨GOOD NEWS FOR INDIAN CRICKET 🚨
– Suryakumar Yadav will lead Indian team in the Asia Cup 2025. [Vaibhav Bhola from News 24 Sports] pic.twitter.com/k3cmA0gaqJ
— Johns. (@CricCrazyJohns) August 5, 2025
சூர்யகுமார் யாதவுக்கு ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்று அழைக்கப்படும் குடலிறக்க பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக, சூர்யகுமார் யாதவ் சில வாரங்களுக்கு முன்பு, அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றார். இதனால்தான் 2025 ஆசிய கோப்பையில் இந்திய அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வி எழுகிறது? இருப்பினும், இதுகுறித்த அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.




ALSO READ: மீண்டும் டி20க்கு திரும்பும் கில்.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு..?
அதாவது, 2025 ஆசிய கோப்பையில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் அடுத்த இரண்டு வாரங்களில் முழுமையாக குணமடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சூர்யகுமார் யாதவ் விரைவில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்குவார். 2025 ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருப்பார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணி எப்போது துபாய் செல்கிறது..?
கிடைத்த தகவலின்படி, இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற 2025 செப்டம்பர் முதல் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படும். இந்திய அணி வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி போட்டியில் தனது முதல் போட்டியில் விளையாடும். இதன் பிறகு, வருகின்ற 2025 செப்டம்பர் 14 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.
ALSO READ: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது..? மாத வாரியான அட்டவணை இதுதான்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025 ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி முதல் கடைசி வாரத்தில் 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் மூன்றாவது வாரமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2025 ஆசியக் கோப்பைக்கான தேர்வு முறையானது இந்திய தேர்வுக்குழு உடற்பயிற்சி நிலைகளை மதிப்பிடவும், பணிச்சுமை மேலாண்மையின் அடிப்படையில் தேர்வுகளை இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.