Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Australia tour 2025: ரோஹித், கோலிக்கு விரைவில் பிரியாவிடையா..? பிசிசிஐ விளக்கம்..!

Virat Kohli, Rohit Sharma ODI Retirement: 2025 ஐபிஎல் சீசனின்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வந்த வதந்திகளை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மறுத்துள்ளார். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிர்வரும் ஒருநாள் சுற்றுப்பயணத்தில் விளையாட உள்ளனர்.

Australia tour 2025: ரோஹித், கோலிக்கு விரைவில் பிரியாவிடையா..? பிசிசிஐ விளக்கம்..!
விராட் கோலி - ரோஹித் சர்மாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Aug 2025 12:29 PM

2025 ஐபிஎல் சீசனின்போது இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) ஜாம்பவான்களான விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து அதிர்ச்சியை கொடுத்தனர். ஏற்கனவே, கடந்த 2024ம் ஆண்டு ரோஹித் மற்றும் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றநிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இந்தநிலையில், இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் வந்துள்ளன, ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இது குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இன்னும் ஓய்வு பெறப் போவதில்லை என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ராஜீவ் சுக்லா என்ன சொன்னார்?


உபி டி20 லீக்கின் போது நடந்த ஒரு பேச்சு நிகழ்ச்சியில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை நிராகரித்து, இருவரும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று கூறினார்.ஒரு தொகுப்பாளர் ராஜீவ் சுக்லாவிடம், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சச்சின் டெண்டுல்கர் போல பிரியாவிடை பெறுவார்களா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ராஜீவ் சுக்லா, “அவர்கள் எப்போது ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் விளையாடி கொண்டிருக்கும்போது, ஓய்வை பற்றிய பேச்சு ஏன்..? நீங்கள் இதுகுறித்து கவலைப்படுகிறீர்கள்..? “ என்று கேட்டார்.

ALSO READ: ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியம்.. ரோஹித் சர்மா போட்ட பக்கா பிளான்!

தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. எந்த வீரரையும் ஓய்வு பெறச் சொல்ல வாரியம் ஒருபோதும் கட்டாயப்படுத்தாது. அவர்கள்தான் ஓய்வு குறித்து சொந்த முடிவை எடுக்க வேண்டும். இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி இன்னும் மிகவும் உடற்தகுதி உள்ள வீரர்களில் ஒருவர் . ரோஹித் சர்மா ஒரு சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர். இந்த இரண்டு வீரர்களின் ஓய்வு பற்றி யாரும் யோசிக்க வேண்டாம். அந்த நேரம் வரும்போது, ​​அவர்களது பிரியாவிடை குறித்து எப்படி செய்வது என்று நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.” என்றார்.

ALSO READ: ஓய்வு முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலி.. வைரலாகும் புகைப்படம்..!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்:

ஆஸ்திரேலியாவில் வருகின்ற 2025 அக்டோபர் 19 முதல் 25 வரை நடைபெறும் ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடவுள்ளனர். டி20 மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்த இரண்டு வீரர்களின் கடைசி சுற்றுப்பயணமாக இருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். இருப்பினும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பயிற்சியைத் தொடங்குவதன் மூலம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த விஷயத்தில் பிசிசிஐ அமைதியாக இருப்பதாகவும், இந்த நட்சத்திர பேட்ஸ்மேன்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க அவசரப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.