Rohit, Kohli Test Retirement: பிசிசிஐ அரசியல் காரணமாக கோலி, ரோஹித் ஓய்வா..? முன்னாள் இந்திய வீரர் குற்றச்சாட்டு!
Karsan Ghavri Shocking BCCI Allegations: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் இந்திய வீரர் கர்சன் கவ்ரி, இது பிசிசிஐயின் உள் அரசியலின் விளைவு எனவும், இருவரும் தங்கள் விருப்பப்படி ஓய்வு பெறவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) கடந்த 2025 மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரியாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு, கோலி மற்றும் ரோஹித் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தங்களது டெஸ்ட் வாழ்க்கை முடிவை அறிவித்தனர். இதன்பிறகு, பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த விஷயத்தில் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கர்சன் கவ்ரி (Karsan Ghavri), இந்த இரண்டு வீரர்களின் ஓய்வு அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் அல்ல, மாறாக பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களின் உள் அரசியலின் விளைவாகும் என தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ: மிஸ்ஸான ரஜத் படிதார் போன் நம்பர்.. கோலி, டிவில்லியர்ஸிடம் சேட்டை செய்த இளைஞர்கள்!




என்ன சொன்னார் முன்னாள் இந்திய வீரர்..?
Karsan Ghavri alleges Virat Kohli & Rohit Sharma were forced to retire from Test cricket despite wanting to continue, claiming “petty politics” within BCCI. He says Kohli deserved a proper farewell.
— CricNews (@CrickNewsInd) August 16, 2025
விக்கி லால்வானி நிகழ்ச்சியில் கோலியின் திடீர் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய வீரர் கர்சன் கவ்ரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கர்சன் கவ்ரி, “இது ஒரு மர்மம். கோலி நிச்சயமாக இன்னும் சில ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒன்று அவரை ஓய்வு பெற கட்டாயப்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் ஓய்வு பெற்றபோது, பிசிசிஐ அவருக்கு பிரியாவிடை கொடுக்கவில்லை.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ இது பிசிசிஐயின் உள் அரசியல், இதை புரிந்துகொள்வது கடினம். மேலும், அவர்கள் காலத்திற்கு முன்பே ஓய்வு பெற்றதற்கான காரணங்கள் இவையாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ரோஹித் சர்மா கூட காலத்திற்கு முன்பே ஓய்வு பெற்றார். அவரை வெளியேறச் சொன்னார்கள். அவர் வெளியேற விரும்பியதல்ல. அவர் தங்க விரும்பினார். ஆனால் தேர்வாளர்களுக்கும் பிசிசிஐக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன. இது ஒருவித அற்ப அரசியலின் ஒரு வழக்கு” என்று தெரிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் கோலி, ரோஹித் ஓய்வா..? பிசிசிஐ முடிவு இதுதான்!
கோலி, ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..?
2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். அதே நேரத்தில், 2025 மே மாதம் கோலி மற்றும் ரோஹித் டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்தனர். இப்போது இந்த 2 ஜாம்பவான்களும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். வருகின்ற 2025 அக்டோபர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அங்கு ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. கிடைத்த தகவலின்படி, இந்த சுற்றுப்பயணம் ரோஹித் மற்றும் விராட்டின் கடைசி சுற்றுப்பயணமாக இருக்கலாம். இருப்பினும், இந்த விஷயத்தில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.