MS Dhoni: விராட் கோலி இப்படி பட்டவர்தான்.. பொதுவெளியில் போட்டுடைத்த எம்.எஸ்.தோனி..!
MS Dhoni on Virat Kohli: சமீபத்திய நிகழ்வில், எம்.எஸ். தோனி விராட் கோலியின் பல்துறைத் திறமைகளைப் பாராட்டினார். ஒரு சிறந்த பாடகர், நடனக் கலைஞர், மிமிக்ரி கலைஞர் மற்றும் மிகவும் பொழுதுபோக்கு நபர் என விராட்டை தோனி விவரித்தார். இந்தப் பாராட்டு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் இரண்டு முன்னாள் சிறந்த கேப்டன்களான எம்.எஸ். தோனி (MS Dhoni) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் மைதானத்திற்கு வெளியே கூட நல்ல நண்பர்களாகக் கருதப்படுகிறார்கள். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தோனியின் ரசிகர்கள், கோலியின் ரசிகர்கள் அடித்து கொண்டாலும், இவர்களின் நட்பு என்பது பாராட்டும்படியாகவே உள்ளது. ஐபிஎல் (IPL) போட்டிகளின்போது இருவருக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்று தோன்றினாலும், பொதுவெளிகளில் ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் பேசி வருகின்றனர். முன்னதாக, விராட் கோலி ஒரு முறை நான் கேப்டன்சியின் இருந்து விலகியபோது, எனக்கு ஆதரவாக மெசேஜ் செய்தது எம்.எஸ்.தோனிதான் என்று தெரிவித்தார். அதன்படி, இப்போது எம்.எஸ்.தோனி விராட் கோலி பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி பற்றி எம்.எஸ்.தோனி கூறியது என்ன..?
விராட் கோலியைப் பற்றிப் பேசும்போது, எம்.எஸ். தோனி தனது 4 பெரிய குணங்களைப் பற்றிக் கூறினார். இப்போது இந்தக் குணங்கள் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விராட் கோலியைப் பற்றி தோனி என்ன சொன்னாலும் அது புதிதாகத் தோன்றுவதற்கு இதுவே காரணம். இப்போது கேள்வி என்னவென்றால் தோனி என்ன சொன்னார்?
ALSO READ: கர்நாடக சேர்ந்த கல்லூரி பெண்ணுக்கு கல்வி உதவி.. இடது கைக்கு தெரியாமல் கொடுத்த ரிஷப் பண்ட்!
அதில் தோனி, “விராட் கோலி ஒரு நல்ல பாடகர், நடனக் கலைஞர், மிமிக்ரியில் நிபுணர். இது மட்டுமல்லாமல், விராட் கோலி ஒரு முழுமையான பொதுபோக்கு தொகுப்பு” என்று கூறினார்,
விராட் கோலியை தனித்துவமாக பாராட்டிய தோனி:
MS Dhoni about Virat Kohli in a recent event in Chennai .
“A Good Singer, Dancer, Good in Mimicry and if he is the mood he is very very entertaining!” pic.twitter.com/MnLJmuojQR
— Yash MSdian ™️ 🦁 (@itzyash07) August 6, 2025
ஐபிஎல் போட்டிகளாக இருந்தாலும் சரி, சர்வதேச போட்டியாக இருந்தாலும் சரி போட்டியின் முக்கியமான கட்டத்தில் ஆக்ரோஷமாக இருப்பார். அதேநேரத்தில், மற்ற நேரங்களில் நடனம் ஆடுகள், மற்ற வீரர்களை போல இமிடேட் செய்வது பல வேடிக்கையான விஷயங்களை செய்வார். இது மட்டுமின்றி, விளம்பர படங்களில் நடிப்பது, நடனம் என கலக்கி வருகிறார்.
ALSO READ: கார் ரேஸில் அஜித் குமாருடன் கைகோர்க்கும் நரேன் கார்த்திகேயன் – வெளியான அறிவிப்பு
ஆனால் தோனியின் வாயிலிருந்து விராட்டைப் பற்றி இதுபோன்ற பாராட்டுகளைக் கேட்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, விராட்டைப் புகழ்ந்த போதெல்லாம், அவர் பெரும்பாலும் விராட்டின் பேட்டிங் அல்லது கேப்டன்சியைப் பாராட்டியுள்ளார்.