Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rishabh Pant: கர்நாடக சேர்ந்த கல்லூரி பெண்ணுக்கு கல்வி உதவி.. இடது கைக்கு தெரியாமல் கொடுத்த ரிஷப் பண்ட்!

Rishabh Pant Sponsors Poor Student: ரிஷப் பண்ட், கர்நாடக மாநிலம் பாகல்கோட்டைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜோதி கான்பூர் மடம் என்ற மாணவியின் கல்லூரிப் படிப்பிற்கு ரூ.40,000 நிதி உதவி செய்துள்ளார். பி.சி.ஏ படிக்க விரும்பிய ஜோதிக்கு நிதி நெருக்கடி இருந்தது. சமூக வலைத்தளங்கள் வழியாக இந்த செய்தி பரவி ரிஷப் பண்ட் உதவி செய்தார்.

Rishabh Pant: கர்நாடக சேர்ந்த கல்லூரி பெண்ணுக்கு கல்வி உதவி.. இடது கைக்கு தெரியாமல் கொடுத்த ரிஷப் பண்ட்!
ரிஷப் பண்ட்Image Source: PTI and Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Aug 2025 08:15 AM

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்த பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் படிப்பில் நிதி உதவி செய்த விஷயம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. கர்நாடகாவை (Karnataka) சேர்ந்த ஜோதி கான்பூர் மடம் என்ற மாணவியின் கல்லூரி கட்டணத்தை பண்ட் செலுத்தியுள்ளார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கிரிக்கெட்டிற்கு வெளியேயும் உண்மையாக ஹீரோ என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இந்தநிலையில், என்ன நடந்தது..? ரிஷப் பண்ட் எப்படி உதவி செய்தார் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சஞ்சு சாம்சன் எங்களுக்குதான்.. உறுதியாக சொன்ன ராஜஸ்தான் அணி! தவறியதா சிஎஸ்கே திட்டம்?

கல்விக்கு பணம் உதவி செய்த ரிஷப் பண்ட்:

ஜோதி கான்பூர் மடம் 12ம் வகுப்பு பொது தேர்வில் மிகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையிலும் 83 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தார். இதையடுத்து, அவருக்கு பிசிஏ (இளங்கலை கணினி பயன்பாட்டுப் படிப்பில்) படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளார். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக ஜோதியால் கல்லூரியில் சேர முடியாமல் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜோதி கான்பூர் மடத்தின் தந்தை தீர்த்தய்யா ஒரு சிறிய டீ கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனால், மகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளது. இதையறிந்த இவர்களின் கிராமத்தை சேர்ந்த கல்வியாளரான அனில் ஹன்ஷிகட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் உதவி கேட்டுள்ளார்.

மேலும், ஜோதியில் கல்லூரி படிப்பின் சேர்க்கை உதவுவதாக அனில் ஹன்ஷிகட்டி உறுதியளித்தது மட்டுமல்லாமல், பெங்களூரில் உள்ள தனது நண்பர்களையும் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இந்த நண்பர்கள் இடையிலான தொடர்பு அப்படியே மெல்ல மெல்ல நகர்ந்து ரிஷப் பண்ட் காதிற்கு எட்டியுள்ளது. ஜோதி படிப்பு மீது கொண்ட ஆர்வத்தை அறிந்த ரிஷப் பண்ட், கடந்த 2025 ஜூலை 17ம் தேதி கல்லூரிக் கணக்கிற்கு நேரடியாக ரூ.40,000-ஐ மாற்றியுள்ளார். இதன்மூலம், ஜோதி கான்பூர் மடத்தின் முதல் செமஸ்டர் கட்டணம் கட்டப்பட்டது.

ALSO READ: கார் ரேஸில் அஜித் குமாருடன் கைகோர்க்கும் நரேன் கார்த்திகேயன் – வெளியான அறிவிப்பு

நன்றி தெரிவித்த ஜோதி:


இதுகுறித்து பேசிய ஜோதி, “பி.சி.ஏ. படிக்க வேண்டும் என்பது என் கனவு, ஆனால் நிதி நிலைமை என் பாதையைத் தடுத்தது. அனில் அண்ணா எனக்காக எடுத்த முயற்சியின் பலனாய் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்கு தெரிய வந்தது. அவர் எனது படிப்பிற்கு உதவி செய்தார். இதற்காக நான் எப்போதும் அவருக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன். கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். என்னைப் போன்ற பல ஏழை மாணவர்களுக்கு அவர் தொடர்ந்து உதவட்டும்.” என்று தெரிவித்தார்.