BCCI’s New Rule: வீரர்களின் இந்த சுதந்திரத்திற்கு இனி நோ.. புதிய கட்டுப்பாட்டை கொண்டு வரும் பிசிசிஐ!
Indian Cricket New Cricket Policy: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்ததை அடுத்து, பிசிசிஐ வீரர்களின் போட்டித் தேர்வு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் புதிய விதியை அமல்படுத்தலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் மீதான கேள்விகள் எழுந்த நிலையில், பிசிசிஐ அவரிடம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த புதிய விதி, நட்சத்திர கலாச்சாரத்திற்கு எதிரானது.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, பிசிசிஐ ஒரு புதிய விதியை அமல்படுத்தக்கூடும். தொடர்ச்சியாக 2 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி இழந்த பிறகு, பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் (Gautam Gambhir) பயிற்சி மீது கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இங்கிலாந்து தொடர் டிராவுக்கு பிறகு, பிசிசிஐ கவுதம் கம்பீர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றத்தில் இருந்து, இந்திய அணியில் (Indian Cricket Team) நிலவும் நட்சத்திர கலாச்சாரத்தை எதிர்த்து வருகிறது. அதன்படி, பிசிசிஐ (BCCI) இத்தகையை விதியை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்திய வீரர்கள் தங்கள் விருப்பப்படி போட்டிகளை தேர்வு செய்து விளையாட முடியாது என்று செய்தி வெளியாகியுள்ளது.
புதிய விதி என்ன..?
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன்படி, இந்திய வீரர்கள் தங்கள் விருப்பப்படி போட்டியை தேர்வு செய்த முடியாத வகையில் இதுபோன்ற ஒரு விதியை பிசிசிஐ கொண்டு வரலாம். இதற்கு, இந்திய தேர்வுக் குழு, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பிற பிசிசிஐ நிர்வாக அதிகாரிகள் ஒருமனதாக தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் வீரர்கள் பணிச்சுமையை காரணம் காட்டி தொடரில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். இந்த விதி குறித்து விவாதங்கள் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் இது குறித்து வீரர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது தெரிகிறது.
ALSO READ: தொடரை சமன் செய்து சாதனையை குவித்த இந்தியா.. அடுக்கப்பட்ட ரெக்கார்ட்ஸ் லிஸ்ட்!




எதிர்காலத்தில் அவர்களின் விருப்பப்படி போட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் கலாச்சாரம் இனி இருக்காது. இதன் பொருள் பணிச்சுமை முற்றிலும் புறக்கணிக்கப்படும் என்று அர்த்தமல்ல, ஆனால் எதிர்காலத்தில் உண்மைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும், இதை அவ்வபோது எடுத்துக்கொள்வது பொறுத்துக்கொள்ளப்படாது. இதனால், இந்திய அணி மிகப்பெரிய சிக்கல்களில் சிக்கிகொள்வதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்தது. இது, இந்திய அணி சிறப்பாக செயல்பட உதவியாக இருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முகமது சிராஜ் உடற்தகுதி:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முகமது சிராஜ் மொத்தமாக 185.3 ஓவர்களை வீசினார். இதுமட்டுமின்றி, கடந்த 6 வாரங்களில் பல மணிநேர பீல்டிங் மற்றும் வலை பயிற்சியில் மறந்துவிடக் கூடாது. உச்சக்கட்ட உடற்தகுதி எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இது மட்டுமின்றி பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரின் செயல்திறன்களை நாம் மறுக்க முடியாது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். அதன்படி, இந்திய அணியை விட யாரும் பெரியவர்கள் அல்ல என்பதையும் நிரூபித்துள்ளது.