India vs England Test Series: கில் ரன் மழை முதல் சிராஜ் விக்கெட் வேட்டை வரை.. இந்தியா – இங்கிலாந்து தொடரில் குவிந்த ரெக்கார்ட் லிஸ்ட்!
England Tour of India Top 5 Records: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. சிராஜ் பும்ராவின் விக்கெட் சாதனையை சமன் செய்தார். இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி வெற்றி பெற்றது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் (India – England Test Series) கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. இந்த 5 போட்டிகள் அனைத்தும் 5வது நாள் சென்றது வரை மட்டுமின்றி, பல பெரிய மற்றும் முக்கிய சாதனைகளை இரு அணிகளும் படைத்தது. இந்தியா (Indian Cricket Team) மற்றும் இங்கிலாந்து இடையேயான இந்த மோதல் டெஸ்ட் வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்தது. அதன்படி, இந்த வரலாற்றுத் தொடரின் சில மிகப்பெரிய சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
பும்ராவை சமன் செய்தார் சிராஜ்:
𝐌𝐎𝐇𝐃 𝐒𝐈𝐑𝐀𝐉 deserves a STATUE on his name! You are champion lad! What a superhuman effort this has been! A warrior who never gives up, a fighter who can die for our nation! 🇮🇳
– 23 wickets.
– 185.3 overs.
– Played all 5 Tests.Take a bow. 🇮🇳❤️#ENGvsIND #MohammedSiraj pic.twitter.com/3QmobutJ5d
— MANOJ TIWARY (@tiwarymanoj) August 4, 2025
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதையடுத்து, இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன் செய்துள்ளார் . 2021ம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது ஜஸ்பிரித் பும்ரா 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.




டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மிக த்ரில்லான வெற்றி:
ஓவல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் மிக நெருக்கமான வெற்றியாக மாறியுள்ளது. முன்னதாக, 2004ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியானது முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது.
தொடரில் அதிக ரன்கள் எடுத்த அணி:
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி அதிக ரன்களை குவித்தது. இந்திய அணியின் ஒவ்வொரு முன்னணி பேட்ஸ்மேனும் இந்தத் தொடரில் ஒரு சதம் அல்லது அரைசதம் அடித்தனர். அதாவது இந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி மொத்தமாக 3,809 ரன்கள் எடுத்தது. இது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எந்த அணியும் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட்டின் சாதனை:
இந்திய அணிக்கு எதிரான தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ரூட் இந்தியாவுக்கு எதிராக தனது 13வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை சமன் செய்தார். ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக 13 டெஸ்ட் சதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல சாதனைகளை முறியடித்த சுப்மன் கில்:
இந்திய இளம் அணியை சுப்மன் கில் வழிநடத்தியது மட்டுமின்றி, இந்தத் தொடரில் 754 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான எந்த டெஸ்ட் தொடரிலும் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கவாஸ்கர் மற்றும் கிரஹாம் கூச் போன்ற ஜாம்பவான்களை கில் பின்னுக்குத் தள்ளிவிட்டார்.
கவாஸ்கரின் சாதனையையும் முறியடித்த கேப்டன் கில்:
ஒரு தொடரில் ஒரு கேப்டனாக அதிக ரன்கள் (754) எடுத்ததன் அடிப்படையில் சுனில் கவாஸ்கரின் 732 ரன்கள் சாதனையையும் கில் முறியடித்துள்ளார். கில்லின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் இரண்டும் இந்தத் தொடரின் சிறப்பம்சங்களாக இருந்தன.