Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WTC 2025–27 Points Table: வெற்றியை பெற்று 3வது இடத்தை தொட்ட இந்திய அணி.. புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்!

India vs England Test Series: இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டியில், இறுதி நாளில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில்லான வெற்றி பெற்றது. தொடர் 2-2 என சமனானது. சிராஜ் மற்றும் கிருஷ்ணாவின் சிறப்பான பந்துவீச்சு இந்திய வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த வெற்றியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

WTC 2025–27 Points Table: வெற்றியை பெற்று 3வது இடத்தை தொட்ட இந்திய அணி.. புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Aug 2025 19:24 PM

ஓவலில் நடந்த இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்டின் (India – England 5th Test) கடைசி நாளில் இந்திய அணி (Indian Cricket Team), இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை 2-2 என சமன் செய்தது. இங்கிலாந்து அணியிடம் (England Cricket Team) 5ம் நாளில் 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, 35 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையாக இருந்தது. இந்திய ரசிகர்கள் முதற்கொண்டு இங்கிலாந்து அணியே வெற்றிபெறும் என நினைத்தனர். ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் விட்டுகொடுக்காமல் திட்டம் தீட்டி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி தலைகீழாக மாற்றியது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்தியாவின் வெற்றிக்கு துணையாக இருந்தனர். இந்த வெற்றியின்மூலம், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

முன்னேற்றம் கண்ட இந்திய அணி:

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு, 46.66 புள்ளிகள் சதவீதத்துடன் (PCT) இந்தியா இப்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து 43.33 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு முன்பாக, ஆஸ்திரேலியா (PCT 100) மற்றும் இலங்கை (PCT 66.66) ஆகிய அணிகள் குறைந்த போட்டிகளில் விளையாடி முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

ALSO READ: ஒரே தொடரில் 21 சதங்கள்.. 70 ஆண்டுகால சாதனையை சமன் செய்த இந்தியா – இங்கிலாந்து!

புதுப்பிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்:

ஆஸ்திரேலியா:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, 36 புள்ளிகள், PCT 100.00 ஆக பெற்று முதலிடத்தில் உள்ளது.

இலங்கை:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி, 1 வெற்றி மற்றும் 1 டிராவுடன் 16 புள்ளிகள், PCT 66.66 ஆக பெற்று 2வது இடத்தில் உள்ளது.

இந்தியா:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியையும், 2 போட்டிகளில் தோல்வியையும், 1 போட்டியை டிராவும் செய்தது. 28 புள்ளிகள், PCT 46.66 பெற்று 3வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியையும், 2 போட்டிகளில் தோல்வியையும், 1 போட்டியை டிராவும் செய்தது. 26 புள்ளிகள், PCT 43.33 பெற்று 4வது இடத்தில் உள்ளது.

ALSO READ: 2-2 என சமனான தொடர்..! கடைசி நாளில் மாஸ் செய்த சிராஜ்.. இந்திய அணி த்ரில் வெற்றி!

வங்கதேசம்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிகள் பட்டியலில் வங்கதேச அணி 2 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் தோல்வியையும், 1 போட்டி டிராவிலும் முடிந்தது. இதன்மூலம், 4 புள்ளிகள், PCT 16.67 பெற்று 5வது இடத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.

அதேநேரத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா: நடந்து கொண்டிருக்கும் WTC 2025–27 சுழற்சியில் இதுவரை எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை.