India Dominates England 2025: அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள்.. இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி..!
India's England Tour 2025: இந்திய அணியின் 2025 இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஏற்றத் தாழ்வுகளுடன் அமைந்தது. ஆனால், 470 பவுண்டரிகள் அடித்து உலக சாதனை படைத்தது. 3809 ரன்கள் குவித்து ரன்கள் சாதனையும் படைத்தது. கேப்டன் சுப்மன் கில் 754 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடு குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி (India – England Test Series) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஏற்றம் இறக்கமாக இருந்தது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (England Cricket Team) இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் லீட்ஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோல்வியுடன் தொடங்கிய இந்திய அணி (Indian Cricket Team), அதன் பிறகு பர்மிங்காமில் நடைபெற்ற 2வது டெஸ்டில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ந்து, லண்டனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணி தோல்வியடைந்தது. அடுத்ததாக, மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும், தற்போது ஓவலில் நடைபெற்று வரும் 5வது மற்றும் இறுதி டெஸ்டில் இந்தியா இதுவரை சிறப்பாக செயல்பட்டது.
இந்தநிலையில், ஓவல் டெஸ்டின் நான்காவது நாளுக்கு முன்பே இந்திய அணி ஒரு தனித்துவமான உலக சாதனையைப் படைத்தது. அதாவது, 2025 ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் இந்தியா மொத்தம் 470 பவுண்டரிகளை அடித்துள்ளது. எந்தவொரு தொடரிலும் எந்தவொரு அணியும் அடித்த அதிகபட்ச பவுண்டரிகள் இதுவாகும்.




ஒரு தொடரில் அதிக பவுண்டரிகள்:
நடப்பு தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இதுவரை 470 பவுண்டரிகளை (422 பவுண்டரிகள் மற்றும் 48 சிக்சர்கள்) அடித்து ஆஸ்திரேலியாவை முந்தியது. கடந்த 1993 ஆஷஸில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 460 பவுண்டரிகளை (451 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள்) அடித்திருந்தது. இதன்மூலம், 32 ஆண்டுகால உலக சாதனையை இந்திய அணி முறியடித்தது.
ALSO READ: ‘தி ஓவல்’ ஸ்டேடியத்தில் அதிகபட்ச ரன் சேஸ் இவ்வளவா..? இந்தியா தடுத்து தொடரை தக்க வைக்குமா..?
ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய அணி:
அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி மொத்தம் 3,809 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் அதிகபட்சமாக பர்மிங்காம் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 587 ரன்கள் எடுத்தது. இந்த மிகப்பெரிய ஸ்கோர் இந்திய அணி பர்மிங்காம் டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.
லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய அணி மொத்தம் 835 ரன்கள் எடுத்தது. பர்மிங்காமில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், இந்திய வீரர்கள் மொத்தம் 1,014 ரன்கள் எடுத்தனர். மூன்றாவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும், இந்திய வீரர்கள் மொத்தம் 557 ரன்கள் எடுத்தனர், நான்காவது டெஸ்டில், இந்திய வீரர்கள் 783 ரன்கள் எடுத்தனர். தற்போது நடைபெற்று வரும் ஓவல் டெஸ்டில் இந்திய அணி 620 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக, இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் மொத்தமாக 3,809 ரன்கள் எடுத்தனர்.
ALSO READ: ஒரு தொடரில் அதிக ரன்கள்.. மாபெரும் சாதனையை படைத்த சுப்மன் கில்..!
எந்த பேட்ஸ்மேன் எத்தனை ரன்கள் எடுத்தனர்..?
– 754 runs by Gill
– 532 runs by Rahul
– 516 runs by Jadeja
– 479 runs by Pant
– 411 runs by Jaiswal
– 284 runs by SundarINDIAN BATTING DOMINANCE IN ENGLAND…!!! 🇮🇳 pic.twitter.com/2nMA8uO9DV
— Johns. (@CricCrazyJohns) August 2, 2025
- சுப்மன் கில் – 754 ரன்கள்
- கே.எல். ராகுல் – 532 ரன்கள்
- ரவீந்திர ஜடேஜா – 516 ரன்கள்
- ரிஷப் பண்ட் – 479 ரன்கள்
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 411 ரன்கள்
- வாஷிங்டன் சுந்தர் – 284 ரன்கள்
- கருண் நாயர் – 205 ரன்கள்
- சாய் சுதர்ஷன் – 140 ரன்கள்
- ஆகாஷ்தீப் – 80 ரன்கள்
- துருவ் ஜூரெல் – 53 ரன்கள்