Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shubman Gill: ஒரு தொடரில் அதிக ரன்கள்.. மாபெரும் சாதனையை படைத்த சுப்மன் கில்..!

India vs England Test Series: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் 11 ரன்கள் எடுத்து, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். இதன் மூலம், சுனில் கவாஸ்கரின் 47 ஆண்டு கால சாதனையையும், விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

Shubman Gill: ஒரு தொடரில் அதிக ரன்கள்.. மாபெரும் சாதனையை படைத்த சுப்மன் கில்..!
சுப்மன் கில்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 31 Jul 2025 23:12 PM

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் (India – England Test Series) போட்டி கென்னிங்டன் ஓவலில் (Oval Cricket Ground) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தப் போட்டியில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை இந்திய வீரர் சுப்மன் கில் (Shubman Gill) முறியடித்துள்ளார். மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த கில்:


இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது டெஸ்ட் நடைபெற்று வரும் கென்னிங்டன் ஓவல் டெஸ்டில் சுப்மான் கில் 11 ரன்கள் எடுத்ததன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 733 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார். முன்னாள் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் 47 ஆண்டுகால சாதனையை கில் முறியடித்தார். கடந்த 1978-79ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்திருந்தார்.

ALSO READ: கில்லுக்கு 5 முறை மிஸ்! இந்திய அணிக்கு 15 முறை.. தொடர்ச்சியாக ராசியில்லாத டாஸ்..!

விராட் கோலியையும் முந்திய கில்:


அதேபோல், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை விட சுப்மன் கில் முன்னிலையில் உள்ளார். 2016-2017ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலி 655 ரன்கள் எடுத்தார். ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேப்டனாக விராட் கோலியின் பெயர் மூன்று முறை முதல் 5 பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 2017-18ல் இலங்கைக்கு எதிரான தொடரில் விராட் 610 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், 2018ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் 593 ரன்களையும் எடுத்துள்ளார். ஆனால் இப்போது கேப்டன் சுப்மன் கில் புகழ்பெற்ற வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் விராட் கோலி இருவரையும் முந்தியுள்ளார்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெண்டுலர்கர் – ஆண்டர்சன் டிராபியில் அதிக ரன்கள் எடுத்து வரலாறு படைத்துள்ளது. ஓவலில் நடைபெற்று வரும் 5வது மற்றும் இறுதி டெஸ்டில், ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா எடுத்த அதிக ரன்கள்:

  • 3272 – இந்தியா – இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2025
  • 3270 – வெஸ்ட் இண்டீஸ் – இந்திய சுற்றுப்பயணம், 1978,79
  • 3230 – இங்கிலாந்து – இந்திய சுற்றுப்பயணம், 2016/17
  • 3119 – இங்கிலாந்து – இந்திய சுற்றுப்பயணம், 1963/64

இந்த டாப் – 5 பட்டியலில் மீதமுள்ள அனைத்து ரன்களும் இந்திய அணியின் சொந்த மைதானத்தில் எடுக்கப்பட்டவை