Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India – England 5th Test: ‘தி ஓவல்’ ஸ்டேடியத்தில் அதிகபட்ச ரன் சேஸ் இவ்வளவா..? இந்தியா தடுத்து தொடரை தக்க வைக்குமா..?

India Dominates Oval Test: இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 50/1 என்ற நிலையில் உள்ளது. இந்தியா வெற்றி பெற்றால் டெஸ்ட் வரலாற்றில் இது சிறப்பான சாதனையாக இருக்கும்.

India – England 5th Test: ‘தி ஓவல்’ ஸ்டேடியத்தில் அதிகபட்ச ரன் சேஸ் இவ்வளவா..? இந்தியா தடுத்து தொடரை தக்க வைக்குமா..?
ஓவல் கிரிக்கெட் ஸ்டேடியம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 03 Aug 2025 14:56 PM

ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது (India – England Test Series) மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்ததன் மூலம், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 374 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 3ம் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி (England Cricket Team) இதுவரை 1 விக்கெட்டை இழந்து 50 ரன்கள் எடுத்துள்ளது. இப்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 324 ரன்கள் தேவையாக உள்ளது. அதேநேரத்தில், இந்திய அணிவெற்றி பெற 8 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். ஒரு வேளை இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இது வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தி ஓவல் ஸ்டேடியத்தில் (Oval Cricket Ground) இவ்வளவு பெரிய ஸ்கோரை இதற்கு முன்பு எந்த அணியும் துரத்தியதில்லை.

இதுவரை எப்படி..?

ஓவல் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு கடினமானதாக இருக்கும். இதுவே, நான்காவது இன்னிங்ஸின்போது சவால்கள் இன்னும் நிறைந்ததாக இருக்கும். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன் பிறகு இங்கிலாந்து நன்றாகத் தொடங்கினாலும், முகமது சிராஜின் 4 விக்கெட்டுகள் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் 4 விக்கெட்டுகள் இங்கிலாந்தை 247 ரன்களுக்குள் சுட்டியது.

ALSO READ: அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.எல்.ராகுல்.. சர்ச்சை எப்படி தொடங்கியது?

2வது இன்னிங்ஸை தொடங்கியபோது, கே.எல்.ராகுல் அவுட்டானதும் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவதற்கு முன்பு, முக்கியமான விக்கெட்டுகள் எதுவும் விழாமல் பார்த்துக் கொள்வதற்காக ஆகாஷ் தீப் நான்காவது இடத்தில் களமிறக்கப்பட்டார். ஆட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று, அதாவது 2025 ஜூலை 2ம் தேதி ஆகாஷ் தீப், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 66 ரன்கள் எடுத்து சத பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து கொண்டார். இது மட்டுமின்றி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 118 ரன்கள் குவித்தார்.

263 என்பதே ஓவலில் அதிகபட்ச ரன் சேசிங்:

ஓவல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 263 ரன்கள் எடுத்ததே மிகப்பெரிய வெற்றியாகும். ஆனால் இந்தப் போட்டி நடந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதாவது, இந்தப் போட்டி 1902ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு, இங்கு பெரிய இலக்கை யாரும் துரத்தவில்லை.

ஓவலில் அதிக ரன் சேசிங்:

  1. 263- இங்கிலாந்து (263/9) vs ஆஸ்திரேலியா, 1902
  2. 252- வெஸ்ட் இண்டீஸ் (255/2) vs இங்கிலாந்து, 1963
  3. 242- ஆஸ்திரேலியா (242/5) vs இங்கிலாந்து, 1972
  4. 225- வெஸ்ட் இண்டீஸ் (226/2) vs இங்கிலாந்து, 1988
  5. 219- இலங்கை (219/2) vs இங்கிலாந்து, 2024

இங்கிலாந்து அணி முன்னிலை:

டெண்டுல்கர் – ஆண்டர்சன் டிராபி என்று அழைக்கப்படும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. தற்போது, இரு அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவையாக உள்ளது. இன்றைய நாளில் இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸ் 50/1 என்ற நிலையில் இருந்து 4வது நாளை தொடரும்.

ALSO READ: நைட் வாட்ச்மேனாக அரைசதம்.. புதிய வரலாறு எழுதிய ஆகாஷ் தீப்..!

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்த டெஸ்டில் வெற்றி பெற இந்தியாவுக்கு 8 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது. இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்தி சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால் இந்தத் தொடரை 2-2 என சமன் செய்யும்.