Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England 5th Test: ஃபீல்டிங்கில் அடுத்தடுத்து சொதப்பல்.. வெற்றியை தட்டிவிட்ட இந்திய வீரர்கள்.. கடுப்பான சுப்மன் கில்!

India Fielding Blunders: இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் சதங்கள் அடித்தனர். இந்திய ஃபீல்டிங்கில் காட்டப்பட்ட சோம்பேறித்தனம் இங்கிலாந்து வெற்றிக்கு வழிவகுத்தது. ஆகாஷ் தீப் பந்தைப் பிடிக்காமல் கால்பந்து விளையாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

India vs England 5th Test: ஃபீல்டிங்கில் அடுத்தடுத்து சொதப்பல்.. வெற்றியை தட்டிவிட்ட இந்திய வீரர்கள்.. கடுப்பான சுப்மன் கில்!
ஃபீல்டிங்கில் சொதப்பல் Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Aug 2025 08:02 AM

ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான 5வது டெஸ்ட் (India – England 5th Test) போட்டியில் இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் (Harry Brook) ஆகியோர் தலா சதம் அடித்து இந்திய அணியின் வெற்றி கனவை தட்டி பறித்தனர். இந்திய அணி எப்படியாவது வெற்றிபெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிரடியாக விளையாடி ஹாரி புரூக்கும், நிதானமாக விளையாடி ஜோ ரூட்டும் இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இதற்கிடையில், இந்திய வீரர்கள் களத்தில் சோம்பேறித்தனத்தைக் காட்டினர். இதனால் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலன் கிடைத்தது. இதனால், இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் களத்தில் கோபமாக காணப்பட்டார்.

என்ன நடந்தது..?

இங்கிலாந்து அணியின் 2வது இன்னிங்ஸின் 61வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. இந்திய அணிக்காக இந்த ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். ஹாரி புரூக் சதம் அடிக்க 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆஃப் ஸ்டம்பை நோக்கி வாஷிங்டன் சுந்தர் வீசும்போது, புரூக் குனிந்து எக்ஸ்ட்ரா கவர் நோக்கி ஒரு ஷாட் அடித்தார். லாங் ஆஃப் நிலையில் நின்று கொண்டிருந்த ஆகாஷ் தீப் பந்தை நிறுத்த முயற்சி செய்யாமல் மிகவும் சோம்பேறித்தனமான ஒரு செயலை செய்தார். அதாவது, பந்தை எடுக்க முயற்சிக்காமல் மைதானத்திலேயே கால்பந்து விளையாடினார்.

ALSO READ: ‘தி ஓவல்’ ஸ்டேடியத்தில் அதிகபட்ச ரன் சேஸ் இவ்வளவா..? இந்தியா தடுத்து தொடரை தக்க வைக்குமா..?

ஆகாஷ் தீப் பவுண்டரியை விட்ட காட்சி:

குனிந்து ஆகாஷ் தீப் கைகளில் பந்தை எடுக்காததால், பந்து அவரது காலில் மோதி எல்லைக்கோட்டை நோக்கித் திரும்பியது. இதன் பிறகு, வாஷிங்டன் சுந்தர் வருத்தத்தில் தலை குனிய, கேப்டன் சுப்மன் கில் முகம் கோபத்தில் சிவந்தது. புரூக்கும் அப்போது சதத்திற்கு 1 ரன் மட்டுமே எடுக்க வேண்டியதாக இருந்தது. அடுத்த பந்திலேயே, ஹாரி புரூக் 2 ரன்களை எடுத்து தனது டெஸ்ட் வாழ்க்கையின் 10வது சதத்தை நிறைவு செய்தார்.

ALSO READ: அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள்.. இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி..!

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் 19 ரன்கள் எடுத்தபோது, கொடுத்த கேட்சை முகமது சிராஜ் தவறவிட்டார். இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, ஹாரி ப்ரூக்  98 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். இதில், அவரது பேட்டில் இருந்து 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களும் பறந்தது. இதன்பிறகு, ஆகாஷ் தீப்தான் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை எடுத்தார். சிராஜ் ப்ரூக்கின் கேட்சை எடுத்தார்.