MS Dhoni: சிஎஸ்கே அணியில் இனி பேட்டிங் பிரச்சனை இருக்காது… அடித்து சொல்லும் எம்.எஸ்.தோனி..!
MS Dhoni on Gaikwad's IPL 2026 Return: 2026 IPL சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணையப் போவதாக எம்.எஸ். தோனி உறுதிப்படுத்தியுள்ளார். காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாட முடியாமல் போன ருதுராஜின் வருகை, CSK பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் என்று தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் திரும்புவது வருகின்ற 2026 ஐபிஎல் (IPL) சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் என்று மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் முழங்கை காயம் காரணமாக ஐபிஎல்லில் தொடக்க ஆட்டங்களுக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட்டால் விளையாட முடியாமல் போனது. இதையடுத்து, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு (Ruturaj Gaikwad) பதிலாக எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இருப்பினும், சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று அணி 10வது இடத்தில் கடைசி இடத்தை பிடித்தது.
ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு திரும்புவது முக்கியம்:
“Rutu will be coming back” 🦁
– MS Dhoni pic.twitter.com/JI173KORL7
— Max Unwell (@thalaterritory) August 2, 2025
சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் தக்க வைத்து கொள்ளும் என்று எம்.எஸ்.தோனி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “எங்கள் பேட்டிங் வரியை பற்றி நாங்கள் கொஞ்சம் கவலைப்பட்டோம். ஆனால், இப்போது எங்கள் பேட்டிங் வரிசை மிகவும் சீராக உள்ளது என்று நினைக்கிறேன். ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு திரும்புவார். கடந்த 2025 சீசனில் ருதுராஜூக்கு காயம் ஏற்பட்டது. வருகின்ற 2026 சீசனில் அவர் மீண்டும் அணிக்கு திரும்பினால். நாங்கள் இப்போது நிம்மதியாக இருப்போம்.




ALSO READ: அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.எல்.ராகுல்.. சர்ச்சை எப்படி தொடங்கியது?
ஐபிஎல் 2025 சீசனில் நாங்கள் மெத்தனமாக இருந்தோம் என்று கூறமாட்டேன். நாங்கள் சமாளிக்க வேண்டிய சில குறைபாடுகள் இருந்தன. வருகின்ற 2025 டிசம்பரில் ஒரு மினி ஏலம் நடக்க உள்ளது. அந்த குறைபாடுகளை சமாளிக்க முயற்சிப்போம். “ என்றார்.
கடந்த 2025 ஏப்ரல் 8ம் தேதி முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சிஎஸ்கே அணிக்காக கெய்க்வாட் தனது கடைசி போட்டி போட்டியில் விளையாடினார். கடந்த இரண்டு சீசன்களில் சூப்பர் கிங்ஸின் செயல்திறன் எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக இருந்தது என்பதை தோனி ஒப்புக்கொண்டார். அந்த குறைபாடுகளை அணி அங்கீகரிப்பது முக்கியம் என்று கூறினார். இதுகுறித்து பேசிய எம்.எஸ்.தோனி, “ஆம், கடந்த சில வருடங்களாக எங்களது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்லதாக அமையவில்லை. நாங்கள் எதிர்பார்த்தபடி செயல்பட முடியவில்லை. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்வது முக்கியம். ஆம், உங்களுக்கு மோசமான சீசன் இருந்தது. ஆனால் என்ன தவறு நடந்தது? கடந்த ஆண்டும் அதே கேள்வி எங்கள் முன் இருந்தது.” என்று தெரிவித்தார்.
ALSO READ: நைட் வாட்ச்மேனாக அரைசதம்.. புதிய வரலாறு எழுதிய ஆகாஷ் தீப்..!
உடற்தகுதி குறித்து பேசிய எம்.எஸ்.தோனி:
உடற்தகுதி குறித்து பேசிய எம்.எஸ்.தோனி, “அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு, என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சூட்சமம் என்னவென்றால், உடல் தகுதிக்கு இன்னும் டிக் மார்க் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாதே” என்று தெரிவித்தார்.