Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

FIDE Women’s World Cup: 19 வயதில் மகளிர் செஸ் உலகக் கோப்பை சாம்பியன்.. வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்..!

Divya Deshmukh Wins FIDE Women's World Cup: திவ்யா தேஷ்முக் FIDE மகளிர் சதுரங்க உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் கோனாரு ஹம்பியை தோற்கடித்து இந்தியாவின் முதல் FIDE மகளிர் சதுரங்க உலகக் கோப்பை வெற்றியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

FIDE Women’s World Cup: 19 வயதில் மகளிர் செஸ் உலகக் கோப்பை சாம்பியன்.. வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்..!
திவ்யா தேஷ்முக்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jul 2025 17:10 PM

மகளிர் செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் (FIDE Women’s World Cup) திவ்யா தேஷ்முக் (Divya Deshmukh) கிராண்ட்மாஸ்டரும், சக நாட்டவருமான கோனாரு ஹம்பியை (Koneru Humpy) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம், FIDE மகளிர் சதுரங்க உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். இந்த இறுதிப்போட்டியில் இரண்டு இந்திய செஸ் வீராங்கனைகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. இதன்பிறகு நடந்த டை பிரேக்கரில் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ரூ. 43 லட்சம் பரிசுத்தொகை:


FIDE மகளிர் சதுரங்க உலகக் கோப்பையில் வெற்றியின் மூலம், திவ்யா தேஷ்முக் இந்தியாவின் 88வது கிராண்ட் மாஸ்டர் என்ற நிலையை எட்டினார். கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற நான்காவது இந்திய பெண் சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக் ஆவார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் செஸ் உலகில் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதை அடைவது என்பது செஸில் எந்தவொரு வீரரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். இந்த வெற்றிக்கு பிறகு, திவ்யா தேஷ்முக் சுமார் ரூ. 43 லட்சம் பரிசுத் தொகையும். 2ம் இடம் பிடித்த ஹம்பிக்கு ரூ. 30 லட்சம் கிடைக்கும்.

ALSO READ: மகளிர் செஸ் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதி.. முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற திவ்யா தேஷ்முக்!

திவ்யா தேஷ்முக் வெற்றி பயணம்:


FIDE மகளிர் சதுரங்க உலகக் கோப்பை அரையிறுதியில் திவ்யா தேஷ்முக், முன்னாள் உலக சாம்பியனான டான் ஜோங்கியை 1.5 -0.5 என்ற கணக்கில் தோற்கடித்தார். இதன்மூலம், 19 வயதான திவ்யா தேஷ்முக் 101 நகர்வுகளில் வெள்ளை நிற காய்களுடன் முதல் ஆட்டத்தை வென்றார். இதனை தொடர்ந்து, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற திவ்யா தேஷ்முக், சக இந்திய வீராங்கனை ஹம்பியை 1.5-0.5 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டத்தை வென்றார்.

ALSO READ: மகளிர் செஸ் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற்றம்.. வெற்றிக்கு பிறகு உணர்ச்சிவசப்பட்ட திவ்யா தேஷ்முக்!

இந்த மதிப்புமிக்க போட்டியின் இறுதிப் போட்டியில் இரண்டு இந்திய சதுரங்க வீராங்கனைகள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது இதுவே முதல் முறை. இரு வீராங்கனைகளும் இப்போது 2026 இல் நடைபெறும் மகளிர் வேட்பாளர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர், 8 வீரர்கள் கொண்ட வேட்பாளர் போட்டி அடுத்த உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் ஜூ வென்ஜுனுடன் யார் மோதுவார்கள் என்பது தெரிய வரும்.