FIDE Women’s World Cup Final: மகளிர் செஸ் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதி.. முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற திவ்யா தேஷ்முக்!
Divya Deshmukh Wins FIDE Women's World Cup Semifinal: ஜார்ஜியாவில் நடைபெற்ற FIDE மகளிர் உலக சதுரங்கக் கோப்பையின் அரையிறுதியில், 19 வயதான இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் முன்னாள் உலக சாம்பியன் ஜோங்கி டானை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியின் மூலம், அவர் இறுதிப் போட்டியில் இடம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும், கிராண்ட்மாஸ்டர் தரத்தையும் பெற்றுள்ளார்.

ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் FIDE மகளிர் உலக சதுரங்கக் கோப்பையின் (FIDE Women’s World Cup 2025) அரையிறுதியின் 2வது ஆட்டத்தில் 19 வயதே ஆன இந்திய சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக் (Divya Deshmukh), முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் ஜோங்கி டானை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதன்மூலம், இந்த இறுதிப்போட்டியில் இடம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றுள்ளார். அதே நேரத்தில், கோனேரு ஹம்பியின் இடம் இன்று டை-பிரேக்கர் போட்டி (ரேபிட்/பிளிட்ஸ்) மூலம் தீர்மானிக்கப்படும். சீன வீராங்கனை டிங்ஜி லீக்கு எதிரான இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிந்தன.
அசத்திய திவ்யா தேஷ்முக்:
இது ஒரு கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்து திவ்யா தேஷ்முக் தொடர்ந்து பெற்ற மூன்றாவது வெற்றியாகும். காலிறுதியில் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜோனர் ஜூவையும், பின்னர் சகநாட்டவரான கிராண்ட்மாஸ்டர் டி. ஹரிகாவையும் தோற்கடித்த பிறகு திவ்யா தொடர்ந்து, சீனாவின் ஜோங்கி டானை தோற்கடித்து கலக்கியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், திவ்யா தனது முதல் கிராண்ட்மாஸ்டர் தரத்தை அடைந்து 2026 FIDE மகளிர் வேட்பாளர்கள் போட்டியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.




ALSO READ: அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் இங்கேதான்.. இடத்தை குறித்த ஐசிசி!
யார் இந்த திவ்யா தேஷ்முக்..?
🇮🇳 19-year-old Divya Deshmukh advances to the Finals of the FIDE Women’s World Cup 2025!
❗️She earns a GM norm and secures her spot at the next Women’s Candidates!#FIDEWorldCup @DivyaDeshmukh05 pic.twitter.com/GlTBHTPdxN
— International Chess Federation (@FIDE_chess) July 23, 2025
கடந்த 2005 டிசம்பர் 9ம் தேதி நாக்பூரில் பிறந்த திவ்யா தேஷ்முக். தனது 5 வயதில் செஸ் விளையாட தொடங்கினார். இவரது பெற்றோரான ஜிதேந்திரா – நம்ரதா என இருவரும் மருத்துவர்கள். திவ்யா தேஷ்முக் கடந்த 2012ம் ஆண்டு அதாவது தனது 7 வௌஅதில் 7 வயதுக்குட்பட்ட தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றார். இதன் பிறகு, 10 வயதுக்குட்பட்டோர் (டர்பன், 2014) மற்றும் 12 வயதுக்குட்பட்டோர் (பிரேசில், 2017) பிரிவுகளில் உலக இளைஞர் பட்டங்களையும் வென்றார். இதன் பிறகு, 2014 இல் டர்பனில் நடைபெற்ற 10 வயதுக்குட்பட்டோர் உலக இளைஞர் பட்டத்தையும், 2017 இல் பிரேசிலில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவையும் வென்றார். அவரது தொடர்ச்சியான முன்னேற்றம் அவரை 2021 இல் பெண்கள் கிராண்ட்மாஸ்டராக மாற்றியது, இதன் மூலம் அவர் விதர்பாவைச் சேர்ந்த முதல் பெண் வீராங்கனை மற்றும் இந்த சாதனையை நிகழ்த்திய நாட்டின் 22வது பெண் வீராங்கனை ஆனார்.
சர்வதேச மாஸ்டர் பட்டம்:
கடந்த 2023ம் ஆண்டு திவ்யா தேஷ்முக் சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும் பெற்றார். தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு உலக ஜூனியர் பெண்கள் 20 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப்பையும் வென்றார், அங்கு அவர் 11 இல் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்தார். இது தவிர, 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தரவரிசையில் முக்கிய பங்கு வகித்தார்.
4 இந்திய வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி:
FIDE மகளிர் உலக சதுரங்கக் கோப்பையில் முதல் முறையாக, நான்கு இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறினர். இந்தப் போட்டியில் முதல் முறையாக, நான்கு இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறினர். கோனேரு ஹம்பியைத் தவிர, ஹரிகா துரோணவள்ளி, ஆர். வைஷாலி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.