India Australia ODI series 2025: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் கோலி, ரோஹித் ஓய்வா..? பிசிசிஐ முடிவு இதுதான்!
Virat Kohli and Rohit Sharma Future: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். 2025 அக்டோபர் மாத ஆஸ்திரேலிய ஒருநாள் சுற்றுப்பயணம் அவர்களின் கடைசி சுற்றுப்பயணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் எப்போது இந்திய அணிக்காக (Indian Cricket Team) மீண்டும் களமிறங்குவார்கள் என்று அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி, ரோஹித் ஓய்வு பெற்றுவிட்டதால் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள். இந்தநிலையில், இந்திய அணி வருகின்ற 2025 அக்டோபர் மாதத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. கிடைத்த தகவலின்படி, இந்த சுற்றுப்பயணம் ரோஹித் மற்றும் விராட்டின் கடைசி சுற்றுப்பயணமாக இருக்கலாம் . இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தங்கள் வாழ்க்கையின் கடைசி போட்டியில் விளையாடலாம். இருப்பினும், இந்த விஷயத்தில் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்களா..?
2025ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்தனர். இருப்பினும், அவர்களின் விருப்பம் அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடைசியாக விளையாடுவதைக் காணலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளதாகவும், ஏனெனில் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.




ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த இரு வீரர்களும் தொடர்ந்து விளையாட விரும்பினால், வருகின்ற 2025 டிசம்பர் மாதம் ஒருநாள் தொடரில் நடைபெறும் உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே டிராபியில் தங்கள் மாநில அணிகளுக்காக விளையாட வேண்டியிருக்கும். ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மோசமாக செயல்பட்டனர். இதன் பிறகு, அவர்கள் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டியிருந்தது, ஆனால் இந்த இரண்டு வீரர்களும் அங்கும் சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாக, கோலி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருந்தது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டனா..?
🚨 BIG UPDATE ON KOHLI & ROHIT 🚨
The Team management is not seeing Virat Kohli and Rohit Sharma in the 2027 World Cup plans – But If both want to stay in the ODI team, they will have to play in the Vijay Hazare Trophy. (Abhishek Tripathi). pic.twitter.com/67nNAGxzsD
— Tanuj (@ImTanujSingh) August 10, 2025
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்பு பிசிசிஐ இதுபோன்ற ஒரு நிபந்தனையை அவர்களுக்கு முன் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை விளையாடுவதற்கு முன்பு இது அவர்களின் கடைசி தொடராக இருக்கலாம் என்றும், இதனை தொடர்ந்து கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த 2025 ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார்கள். ரோஹித் சர்மாவின் தலைமையில், இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா அணிக்கு கேப்டனாக தொடர்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு வீரர்களின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை:
இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த 2007ம் ஆண்டு தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். இதுவரை 273 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 48.76 சராசரியுடன் 11186 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள் மற்றும் 58 அரைசதங்கள் அடங்கும். இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி 2008 ஆம் ஆண்டு ஒருநாள் வடிவத்தில் அறிமுகமானார். இதுவரை 302 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 57.88 சராசரியுடன் 14181 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 51 சதங்கள் மற்றும் 74 அரைசதங்கள் அடங்கும்.
இந்திய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் (ஒருநாள் தொடர்)
- 2025 அக்டோபர் 19: முதல் ஒருநாள் போட்டி (பெர்த்)
- 2025 அக்டோபர் 23: இரண்டாவது ஒருநாள் போட்டி (அடிலெய்டு)
- 2025 அக்டோபர் 25: மூன்றாவது ஒருநாள் போட்டி (சிட்னி)