Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சஞ்சு சாம்சன் உள்ளே.. அஸ்வின் வெளியே.. சிஎஸ்கே அணியில் குழப்பம்!

2026 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மாற்றங்கள் குறித்த தகவல்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. ராஜஸ்தான் அணியில் உள்ள சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க சென்னை முயற்சிப்பதாகவும், ரவிச்சந்திரன் அஸ்வின் அணியை விட்டு விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சஞ்சு சாம்சன் உள்ளே.. அஸ்வின் வெளியே.. சிஎஸ்கே அணியில் குழப்பம்!
அஸ்வின், சஞ்சு சாம்சன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 09 Aug 2025 08:30 AM

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பாக தொடர்ச்சியாக வெளியாகும் தகவல்கள் அனைத்து கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவாக அறியப்படும் ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் தொடர்ச்சியாக 18 சீசன்கள் நடைபெற்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய பத்து அணிகள் விளையாடி வருகிறது.

இந்த அணிகளில் உள்ளூர் முதல் சர்வதேச விளையாட்டு வீரர்கள் என பலரும் இடம் பெறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏலம் நடைபெறும் நிலையில் ஐபிஎல் அணிகள் தங்களிடம் உள்ள வீரர்களை விடுவித்தும் மாற்றுவழர்களை தேர்வு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Also Read:  இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது…? யாருடன்..? முழு விவரம் இதோ!

சென்னை அணியில் நீடிக்கும் சஸ்பென்ஸ்

இப்படியான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு தோனி தலைமையில் களம் இறங்கிய சென்னை அணி தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீசன் வரை அவர் தலைமையிலேயே விளையாடியது. 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்கு கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். தோனி சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

வயது மூப்பு காரணமாக அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே சென்னை அணியில் தோனிக்கு அடுத்து யார் என்று கேள்வி எழுந்து வருகிறது. இப்படியான நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என திறமை கொண்ட அவரே தோனிக்கு மாற்றாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

Also Read:  சிஎஸ்கே வெளியிடும் அஸ்வினின் ஆவணப்படம்! காதல் கதையை பகிர்ந்த அஸ்வினின் மனைவி!

சஞ்சு சாம்சன் உள்ளே.. அஸ்வின் வெளியே?

ஆனால் சஞ்சு சாம்சனை விடுவிக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் சஞ்சு சாம்சன் ஏற்கனவே அணிமாறும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனை ஒருபுறம் இருக்க நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த அணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025 சீசனில் அவர் 9 போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்தார். பெரும்பாலான போட்டிகளில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இளம் வீரர்களை தயார் படுத்தும் பொருட்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அஸ்வின் களம் இறக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தன்னை விடுவிக்குமாறு அணியின் உரிமையாளர்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அஸ்வினை சென்னை அணி ரூபாய் 9.75 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. என்ன நடக்கப் போகிறது என தெரியாமல் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.