Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajat Patidar: மிஸ்ஸான ரஜத் படிதார் போன் நம்பர்.. கோலி, டிவில்லியர்ஸிடம் சேட்டை செய்த இளைஞர்கள்!

RCB Captain Rajat Patidar's Phone Number: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதாரின் பழைய மொபைல் எண், சத்தீஸ்கர் இளைஞர் ஒருவருக்குக் கிடைத்தது. அந்த எண்ணுக்கு விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் போன்றோர் அழைத்ததால், சம்பவம் வைரலானது. ரஜத் படிதார் காவல்துறையை அணுகி எண்ணை மீட்டார்.

Rajat Patidar: மிஸ்ஸான ரஜத் படிதார் போன் நம்பர்.. கோலி, டிவில்லியர்ஸிடம் சேட்டை செய்த இளைஞர்கள்!
ரஜத் படிதார்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Aug 2025 20:18 PM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு (Rajat Patidar) ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேநேரத்தில், இந்த விஷயத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி (Virat Kohli) மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரும் இந்த விஷயத்தில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து ரஜத் படிதாருக்குத் தெரிந்ததும், அவர் காவல்துறையினரின் உதவியை நாடினார். சத்தீஸ்கரின் காரியாபந்த் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு பெங்களூரு அணியை சேர்ந்த பல ஜாம்பவான்கள் வீரர்களிடமிருந்து அழைப்பு வந்ததுதான் காரணம். இந்தநிலையில், என்ன நடந்தது, ரஜத் படிதார் ஏன் காவல்துறையினர் நாடினார் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

ரஜத் படிதாருக்கு என்ன நடந்தது.?

தொலைத்தொடர்பு நிறுவனம் ரஜத் படிதாரின் பழைய மொபைல் எண் கடந்த 90 நாட்களுக்கு மேல் பயன்படுத்தாதால் அது தானாக செயலிழந்துள்ளது. இது சத்தீஸ்கரின் கரியாபந்தில் வசிக்கும் மனிஷின் பெயரில் வழங்கப்பட்டது. 2025 ஜூன் 28ம் தேதி கடையில் இருந்து ரஜத் படிதாரின் பழைய எண்ணானது மனீஷ்க்கு இந்த புதிய ஜியோ சிம் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த எண்ணில் வாட்ஸ் அப் ஓபன் செய்ததும், அதில் ரஜத் படிதரின் புகைப்பட சுயவிவரப் படம் வந்துள்ளது. இதை பார்த்து அதிர்த்தியடைந்த மனீஷ் உடனடியாக தனது நண்பர் கேம்ராஜிடமும் இதைப் பற்றி சொல்லியுள்ளார். மணீஷ் மற்றும் அவரது நண்பர் கேம்ராஜுக்கு ஆரம்பத்தில் இதை அசால்ட்டாக எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து, இவர்களுக்கு தெரியாமல் இவர்களது எண்ணில் விராட் கோலி, ஏபிடில்லியர்ஸ் உட்பட பல ஜாம்பவான்களின் VIP எண்கள் வரிசையாக வந்துள்ளது.

ALSO READ: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் கோலி, ரோஹித் ஓய்வா..? பிசிசிஐ முடிவு இதுதான்!

கால் செய்த கோலியும் டிவில்லியர்ஸூம்..


மனீஷ் வாங்கிய புதிய எண்ணிற்கு சில நாட்களுக்குள், அவரது தொலைபேசிக்கு தொடர்ச்சியான அழைப்புகள் வர தொடங்கின. அழைத்தவர்களில் பலரும் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர். கிடைத்த தகவலின்படி, அழைத்தவர்களில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் அடங்குவர். ஆரம்பத்தில், மனீஷ் மற்றும் அவரது நண்பர் கெம்ராஜ் யாரோ கேலி செய்வதாக நினைத்து, பதிலுக்கு கேலி கிண்டல் செய்துள்ளனர். இதன் பின்னர், ரஜத் படிதார், மனீஷ்க்கு போன் செய்து தனது எண்ணை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

ரஜத் படிதாரை கேலி செய்த இளைஞர்கள்:

ரஜத் படிதார், மனீஷூக்கு அழைத்து, “நண்பா, நான் ரஜத் படிதார் பேசுகிறேன். இது எண்ணுடைய எண், தயவுசெய்து இதை திருப்பி கொடுங்கள்” என்று கூறியுள்ளார். அப்போது, மனீஷ் தன்னிடம் யாரோ விளையாடுகிறார்கள் என்று எண்ணி, நான் தான் எம்.எஸ்.தோனி பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ரஜத் படிதார் எண்ணின் முக்கியத்துவம் குறித்து சொல்லியும் மனீஷ் மற்றும் கெம்ராஜ் நம்ப தயாராக இல்லை. இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார், “சரி, நான் போலீஸை அனுப்புகிறேன்” என்று தெரிவித்து போன் வைத்தார்.

ALSO READ: 2019ல் விராட் கோலியை நீக்க திட்டம் போட்டதா ஆர்சிபி? முன்னாள் ஆல்ரவுண்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

உடனடியாக ரஜத் படிதான் உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அடுத்த 10 நிமிடங்களில் காவல்துறையினர் மனீஷின் வீட்டு வாசலை அடைந்தனர். அப்போது, மனீஷ் இது நகைச்சுவை அல்ல என்பதை உணர்ந்து கொண்டார். தொடர்ந்து, காவல்துறையிடம் மனீஷ் அந்த என்ணை கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய மனீஷ், “தவறான எண்ணின் காரணமாக, கோலியிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது, என் வாழ்க்கையில் கனவு நனவாகியது” என்று தெரிவித்தார்.