Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rohit Sharma: ஆடாமலே 2வது இடத்தில் ஆட்சி.. தரவரிசையில் தடம் பதித்த ரோஹித் சர்மா!

ICC ODI Rankings: 2025 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ரோஹித் சர்மா, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பாபர் அசாமின் குறைந்த ஸ்கோர்களால் இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சுப்மன் கில் முதலிடத்திலும், விராட் கோலி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

Rohit Sharma: ஆடாமலே 2வது இடத்தில் ஆட்சி.. தரவரிசையில் தடம் பதித்த ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Aug 2025 08:24 AM

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு (2025 Champions Trophy) பிறகு இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma), எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சமீபத்திய ஒருநாள் தரவரிசையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதற்கு காரணம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் (Babar Azam) தொடர்ச்சியாக அடித்த குறைந்த ஸ்கோர்கள் அவரை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது.

ALSO READ: உள்நாட்டு தொடரின் சிக்கலில் கோலி, ரோஹித்.. கட்டாயப்படுத்தும் பிசிசிஐ.. விரைவில் ஓய்வா..?

யார் முதலிடம்..?


ஐசிசி வெளியிட்ட ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் 784 மதிப்பீட்டு புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 756 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 2வது இடத்தில், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 751 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். அதேநேரத்தில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 736 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசி ஆண்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களை பொறுத்தவரை முதல் 15 இடங்களில் உள்ள 5 பேட்ஸ்மேன்களில் அவர்கள் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் எட்டாவது இடத்தையும், கே.எல். ராகுல் 15வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ரோஹித் – கோலி எப்போது களமிறங்குவார்கள்..?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 2025 ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு டி20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றனர். ஐபிஎல் 2025 சீசனுக்கு பிறகு நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் கோலி மற்றும் ரோஹித் சர்மா வருகின்ற 2025 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கலாம்.

ALSO READ: இந்திய அணி இதற்காக இங்கிலாந்து வரவில்லை.. ஸ்டாக்ஸ் செயலை விமர்சித்த சச்சின்!

இருப்பினும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணி நிர்வாகத்தின் திட்டங்களில் அவர்கள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இருவரும் இந்த மாதம் அதாவது 2025 ஆகஸ்ட் மாதம் மீண்டும் களத்தில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த வங்கதேசத்திற்கு எதிரான இருதரப்பு தொடர் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளனர்.