Sachin Tendulkar: இந்திய அணி இதற்காக இங்கிலாந்து வரவில்லை.. ஸ்டாக்ஸ் செயலை விமர்சித்த சச்சின்!
India-England Test Series: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. நான்காவது டெஸ்டின் கடைசி நாளில், டிராவுக்கு வற்புறுத்திய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் வேண்டுகோளை ஜடேஜா மற்றும் சுந்தர் மறுத்தனர். இருவரும் சதம் அடித்து போட்டியை டிரா செய்தனர். சச்சின் டெண்டுல்கர், ஜடேஜா மற்றும் சுந்தரின் செயலை ஆதரித்தார்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் (India – England Test Series) கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. தொடரின் நான்காவது போட்டி டிராவில் முடிந்தது. மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளின் கடைசி செஷனில் அன்றைய நாள் முடிவதற்குள் போட்டி எப்படியும் டிராவில் முடியும் என அறிந்த இங்கிலாந்து வீரர்கள், களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), வாஷிங்டன் சுந்தரிடம் (Washington Sundar) சென்று கைலுக்கி டிராவிற்கு ஒத்துழைக்குமாறு கேட்டனர். அப்போது, ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் சதத்தை நெருங்கி கொண்டிருந்தால், இருவரும் ஒப்புகொள்ளவில்லை.
தொடர்ந்து, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவை நோக்கி கையை நீட்டி, டிரா செய்யுமாறு வற்புறுத்தினார். அந்தநேரத்தில், ஜடேஜா எதுவும் என் கையில் இல்லை, போய் பந்துவீசுங்கள் என்று கூறினார். இதனால் எரிச்சலடைந்த ஸ்டோக்ஸ் மற்றும் மற்ற இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து கிண்டல் செய்து ஜடேஜாவை வெறுப்பு ஏற்றிகொண்டனர். இதை எதையும் காதில் வாங்காமல் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சதமடித்து அசத்தி போட்டியை டிரா செய்தனர்.




ALSO READ: கர்நாடக சேர்ந்த கல்லூரி பெண்ணுக்கு கல்வி உதவி.. இடது கைக்கு தெரியாமல் கொடுத்த ரிஷப் பண்ட்!
சச்சின் டெண்டுல்கர் காட்டம்:
The Master Blaster highlights Jadeja’s presence and the team’s intensity when it mattered most 💯#SachinTendulkar #RavindraJadeja #ENGvIND pic.twitter.com/6U84T62kDL
— 100MB (@100MasterBlastr) August 6, 2025
இந்த விஷயத்தில் பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பென் ஸ்டோக்ஸின் செயலை விமர்சித்தனர். தற்போது, இந்திய அணியின் ஜாம்பவான் இதுகுறித்து கடுமையான கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடன் கைக்குலுக்காமல் ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் சதமடித்தது கேம் ஸ்பிரிட் இல்லை என்று பலரும் சொல்கிறார்கள். அது எப்படி கேம் ஸ்பிரிட் இல்லாமல் போகும், இருவரும் சதத்திற்காக விளையாவில்லை, போட்டியை காப்பாற்றவே விளையாடினார்கள். அவர்கள் இதை சரியாக செய்து முடித்துவிட்டனர்.
தொடர் இப்போது உயிர்ப்புடன் இருக்கிறது, அந்த சூழலில் உங்களுடைய பவுலர்கள், வீரர்கள் சென்று ஓய்வு பெற வேண்டும். அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்பதற்காக நாங்கள் கைக்குலுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரி, இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா, இல்லை. உங்களுக்கு உதவுவதற்காக இந்தியா அங்கு வரவில்லை.
ALSO READ: விராட் கோலி இப்படி பட்டவர்தான்.. பொதுவெளியில் போட்டுடைத்த எம்.எஸ்.தோனி..!
இங்கிலாந்து அணி பந்தை ஹாரி புரூக்கிற்கு கொடுக்க விரும்பினால் அது பென் ஸ்டோக்ஸின் முடிவு. இது இந்தியாவின் பிரச்சனை இல்லை. அவர்கள் சதம் அடிக்க அல்ல, டிராவுக்காக விளையாடினார்கள். அவர்கள் பேட்டிங் செய்ய வந்தபோது அவுட்டாகியிருந்தால், இந்திய அணி தோற்றிருக்கலாம். நான் இந்திய அணி செய்ததை முழுமையாக ஆதரிக்கிறேன். அதற்கு பொறுப்பாக கம்பீர், சுப்மன் கில், ஜடேஜா, வாஷிங்ட சுந்தர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கும் எனது 100 சதவீத ஒத்துழைப்பை வழங்குவேன். கடைசி டெஸ்டில் ரன்கள் அதிகம் தேவைப்பட்டபோது சுந்தர் அற்புதமாக விளையாடி ரன்கள் குவித்தார் அல்லவா..? கிரீஸில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, 4வது டெஸ்டிலும் அதையே செய்தார். ரன்கள் அதிகமாக தேவை என்ற நிலையிலும், 5வது டெஸ்டிலும் அதையே செய்து அசத்தினார்” என்றார்.