Bumrah’s Future in Doubt: பிசிசிஐயின் புதிய விதியால் சிக்கும் பும்ரா.. விரைவில் டெஸ்டில் ஓய்வா..?
BCCI New Policy: பும்ராவின் பணிச்சுமை மேலாண்மை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. BCCI புதிய விதியை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து பும்ரா ஓய்வு பெறலாம் என்கிற கவலை எழுந்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் (India – England Test Series) முகமது சிராஜ் (Mohammed Siraj) 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணி தொடர் 2-2 என சமன் செய்ய பெரிதும் உதவினார். அதேநேரத்தில், பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளில் 3ல் மட்டுமே விளையாடியதால், விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) வீச்சாளராக இருப்பது மட்டுமின்றி, வெறும் 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் சிராஜின் அற்புதமான செயல்பாட்டிற்கு முன்னால் பும்ராவின் செயல்திறன் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. பணிச்சுமை மேலாண்மை மற்றும் உடற்பயிற்சி பிரச்சினைகள் காரணமாக, பும்ரா தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. இப்போது பிசிசிஐ அத்தகைய விதியை பரிசீலித்து வருகிறது, இதன் காரணமாக பும்ரா தனது டெஸ்ட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.




அறிமுகமாகிறதா புதிய விதி..?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வீரர்கள் தாங்கள் விளையாட விரும்பும் போட்டிகளைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கும் புதிய விதியை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அஜித் அகர்கர் மற்றும் நிர்வாகத்தின் பிற உயர் அதிகாரிகள் தலைமையிலான தேர்வுக் குழு ஒருமனதாக சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், வீரர்கள் பணிச்சுமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவாரா?
Jasprit Bumrah said, “my retirement is far far away, I’ve just started”. pic.twitter.com/A4UhtgL6eE
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
பிசிசிஐ இந்த விதியை அமலுக்கு கொண்டு வந்தால், முதலில் பாதிக்கப்படுவது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராதான். 3வது டெஸ்ட்க்கு பிறகு, 4வது டெஸ்டில் தொடர்ச்சியாக பும்ரா களமிறங்கியபோது அவரது பந்துவீச்சு வேகத்தில் சரிவு பதிவு செய்யப்பட்டது. பும்ரா வழக்கமாக சராசரியாக மணிக்கு 140-145 கிமீ வேகத்தில் பந்து வீசுவார். ஆனால் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்டில் அவரது உடற்தகுதி மோசமடையத் தொடங்கியது. இதன் காரணமாக அவரது சராசரி வேகம் மணிக்கு 130-135 கிமீ ஆகக் குறைந்தது.
ALSO READ: வீரர்களின் இந்த சுதந்திரத்திற்கு இனி நோ.. புதிய கட்டுப்பாட்டை கொண்டு வரும் பிசிசிஐ!
டெஸ்ட் போட்டிகளில் எந்தவொரு பந்துவீச்சாளரும் தொடர்ச்சியாக பந்துவீசுவது மிக முக்கியம். அதேபோல், பும்ராவும் தன்னால் முடிந்த அளவிற்கு நீண்ட ஸ்பெல்களை வீசுகிறார். ஆனால், தொடர்ச்சியான போட்டிகளில் நீண்ட ஸ்பெல்களை வீசுவதில் அவர் சிரமங்களை எதிர்கொள்கிறார். பிசிசிஐ இந்த கடுமையான விதியைக் கொண்டுவந்தால், பும்ரா குறைந்தபட்சம் தனது டெஸ்ட் வாழ்க்கையில் இறுதி முடிவை எடுக்க வேண்டியிருக்கும். பும்ரா இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 219 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.