Lucky Charm: கால் வைக்கும்போதெல்லாம் இந்திய அணி வெற்றி.. யார் இந்த லக்கி சார்ம்..?
Indian cricket team Lucky Charm: இந்திய இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரேல், தனது ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இது அவரை அணியின் 'லக்கி சார்ம்' ஆக மாற்றியுள்ளது. அவர் சிறப்பான விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி (Virat Kohli) டெஸ்ட் மற்றும் டி20 ஓய்வுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் (Indian Cricket Team) பல இளம் வீரர்கள் ஜொலித்து வருகின்றனர். சமீபத்தில், நடந்து முடிந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது கூட, இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக அற்புதமாக விளையாடி தொடரை 2-2 என சமன் செய்தது. இந்தத் தொடரின் கடைசி போட்டியில், ஒரு இந்திய வீரர் இந்திய அணிக்கு அதிர்ஷ்டசாலியாகத் திகழ்ந்தார் என்றால், உங்களால் நம்ப முடியுமா..? உண்மையில், அந்த வீரர் இந்திய அணிக்காக களமிறங்கும்போதெல்லாம் இதுவரை இந்திய அணி அந்த டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு அவர் லக்கி சார்மாக இருந்துள்ளார்.
யார் இந்த லக்கி சார்ம்..?
Serving you a quiz with your chai ☕📱…
Dhruv Jurel has been on the winning side in each of his first 5 Tests!
Not bad for a start, right?😏
Only one Indian has done better: 6 wins in his first 6 Tests. Can you name him?
— Cricbuzz (@cricbuzz) August 6, 2025
இந்திய அணியின் இந்த லக்கி சார்ம் வேறு யாருமல்ல, இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல்தான். இந்திய டெஸ்ட் அணியில் ஜூரெல் தனது விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கால் சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாமல், இந்திய அணியின் ஒரு லக்கி சார்மாகவும் உருவெடுத்துள்ளார். இவருக்கு தற்போது 24 வயதேதான் ஆகிறது. துருவ் ஜூரெல் இந்திய அணிக்காக இதுவரை வெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, இந்தியா இந்தப் போட்டிகள் அனைத்தையும் வென்றுள்ளது. அதாவது, துருவ் ஜூரெல் தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை ஒரு தோல்வியையும் சந்திக்கவில்லை. துருவ் ஜூரெல் இனி வரும் நாட்களிலும் இந்த அதிர்ஷ்டத்தைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரிய சாதனையை அவரால் படைக்க முடியும்.




வெஸ்ட் இண்டீஸ் வீரர் பெயரில் சிறப்பு சாதனை:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற சாதனை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஆல்டைன் பாப்டிஸ்ட் பெயரில் உள்ளது. ஆல்டைன் பாப்டிஸ்ட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் அறிமுகம் ஆனது முதல் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் போட்டிகளில் வென்றார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து வெற்றி பெறுவது எளிதல்ல என்பதால், இந்த சாதனை தனித்துவமானது. அந்தக் காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி உச்சத்தில் இருந்தது. மேலும், பாப்டிஸ்ட்டின் பங்களிப்பு அந்த வெற்றியின் ஒரு பகுதியாகும். அதேநேரத்தில், ஆல்டைன் பாப்டிஸ்ட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, துருவ் ஜூரெல் தனது வாழ்க்கையின் இறுதி வரை எந்த டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்ததே கிடையாது.
துருவ் ஜூரெல் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை:
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த துருவ் ஜூரெல் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கடந்த 2024ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். முதல் டெஸ்டிலேயே, தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இந்த 5 போட்டிகளில் இதுவரை 36.42 சராசரியுடன் 255 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 1 அரைசதம் அடங்கும். அதே நேரத்தில், ஒரு விக்கெட் கீப்பராக, அவர் 9 கேட்சுகளையும் 2 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.