Team India Dropped Catches: 2025 ஆசிய கோப்பையில் மட்டும் 12 கேட்சுகள் மிஸ்.. சொதப்பல் பீல்டிங்கில் தவிக்கும் இந்திய அணி!
Team India Drop 12 Catches In Asia Cup 2025: 2025 ஆசிய கோப்பையில் இந்திய அணி அதிக கேட்சுகளை விட்டு முதலிடத்தில் உள்ளது. இந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 12 கேட்சுகளை விட்டுள்ளது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில்தான் இந்திய அணி அதிக கேட்சுகளை விட்டுள்ளது.

2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) இறுதிப் போட்டிக்கு இந்திய அணி (Indian Cricket Team) தகுதி பெற்றிருந்தாலும், சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியின் பீல்டிங் செயல்திறன் மிகவும் மோசமாகவே இருந்தது. வங்கதேசத்திற்கு எதிரான நேற்றை போட்டியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் மொத்தமாக 5 கேட்சுகளை தவறவிட்டனர். இது மிகவும் வேதனைக்குரியது. இந்த போட்டியில் சில நல்ல கேட்சுகளை இந்திய வீரர்கள் எடுத்தாலும், ஒரே போட்டியில் இவ்வளவு கேட்சுக்களை விட்டுக்கொடுத்தது மிகவும் மோசமான சாதனையாக அமைந்தது. மேலும், இந்த 2025 ஆசிய கோப்பையில் அதிக கேட்சுகளை விட்டுக்கொடுத்த அணியாக இந்திய அணி இப்போது மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்த பட்டியலில் ஹாங்காங் மற்றும் சீனா 2வது இடத்தில் உள்ளது.
ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு வேண்டாம்! 5 வீரர்களுக்கு வாய்ப்பை மறுத்த பிசிசிஐ.. காரணம் என்ன?




இந்திய அணி முதலிடம்:
India have dropped 12 catches so far in Asia Cup 2025.🤣#INDvsBAN #TheycalllHimOG pic.twitter.com/9Df9V22vhf
— CricketQuickBuzz (@CricketQuickBuz) September 24, 2025
2025 ஆசிய கோப்பையில் இந்திய அணி அதிக கேட்சுகளை விட்டு முதலிடத்தில் உள்ளது. இந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 12 கேட்சுகளை விட்டுள்ளது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில்தான் இந்திய அணி அதிக கேட்சுகளை விட்டுள்ளது. மறுபுறம், ஹாங்காங் சீனா 3 போட்டிகளில் மொத்தம் 11 கேட்சுக்களை விட்டுள்ளது. இந்த பட்டியலில் வங்கதேச அணி 5 போட்டிகளில் 8 கேட்சுகளை விட்டு 3வது இடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், இலங்கை 6 கேட்சுகளையும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமன் தலா 4 கேட்சுகளையும், பாகிஸ்தான் 3 மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 2 கேட்சுகளை விட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ALSO READ: பல கேட்சை விட்டாலும் மேட்சை விடாத இந்தியா.. வங்கதேசத்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய சூர்யா படை!
2025 ஆசிய கோப்பையில் இதுவரை அதிக கேட்சுகளை விட்ட அணி எது..?
- இந்தியா – 12
- ஹாங்காங் சீனா – 11
- வங்கதேசம் – 8
- இலங்கை – 6
- ஆப்கானிஸ்தான் – 4
- ஓமன் – 4
- பாகிஸ்தான் – 3
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – 2
கேட்ச் சதவீதம்:
2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகியவை அடங்கும். இந்த 4 அணிகளில் இந்திய அணியே மிக மோசமான கேட்சிங் விகிதத்தை கொண்டுள்ளது. இந்த போட்டியில் இதுவரை இந்தியா 67.5 சதவீத கேட்சுகளை மட்டுமே பிடித்துள்ளது. வங்கதேசம் 68.4 சதவீத கேட்சுகளுடன் 2வது இடத்திலும், இலங்கை அணி 74.1 சதவீத கேட்சுகளையும், பாகிஸ்தான் 86.3 சதவீத கேட்சுகளையும் பிடித்துள்ளது.