Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asia Cup Trophy Controversy: வென்ற அணிக்கே ஆசியக் கோப்பை.. ஏசிசி கூட்டத்தில் பிசிசிஐ கடும் வாதம்..!

Asian Cricket Council: துபாயில் இன்று அதாவது 2025 செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பொதுக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதிகளாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோர் இருந்தனர்.

Asia Cup Trophy Controversy: வென்ற அணிக்கே ஆசியக் கோப்பை.. ஏசிசி கூட்டத்தில் பிசிசிஐ கடும் வாதம்..!
ஆசிய கோப்பை சர்ச்சைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Sep 2025 20:36 PM IST

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (Asian Cricket Council) வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று அதாவது 2025 செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்றது. இதில், ஆசிய கோப்பை வெற்றியாளரான இந்திய அணிக்கு (Indian Cricket Team) கோப்பையை வழங்காததற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அதேநேரத்தில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி பிடிவாதமாக இன்னும் கோப்பையை வழங்க மறுத்துள்ளார். அப்போது, பிசிசிஐ துணை தலைவர் ராஜீச் சுக்லா (Rajeev Shukla), ஆசிய கோப்பை யாருடைய பிறப்புரிமையும் அல்ல, அதை வென்ற அணிக்கே வழங்க வேண்டும் என்றார்.

ALSO READ: முட்டாள்தனம்.. பாகிஸ்தான் பயிற்சியாளரை சாடிய அக்தர்!

என்ன நடந்தது..?

கடந்த 2025 செப்டம்பர் 28ம் தேதி துபாயில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றிக்கு பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை இந்திய அணி ஏற்க மறுத்துவிட்டது. இதன் விளைவாக, இந்திய அணி கோப்பை மற்றும் பதக்கங்களை வாங்கவில்லை. இந்தநிலையில், துபாயில் இன்று அதாவது 2025 செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பொதுக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதிகளாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோர் இருந்தனர்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில்:


ஆசிய கோப்பை இன்னும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் உள்ளது. மேலும், இது எப்போது வெற்றி பெற்ற அணியை சென்றடையும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிடிசி இடம் தெரிவிக்கையில், “2025 செப்டம்பர் 30ம் தேதியான இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கோப்பை வழங்கப்படாததற்கும், போட்டிக்கு பிந்தைய பரிசு விநியோக விழாவில் ஏசிசி தலைவர் நக்வி உருவாக்கிய நாடகத்திற்கும் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ALSO READ: காயம் காரணமாக மீண்டும் வாய்ப்பு மிஸ்? ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம் பெறுவாரா ஹர்திக் பாண்ட்யா?

கோப்பையை வென்ற அணிக்கே வழங்க வேண்டும் என்று ராஜீவ் சுக்லா தெளிவாக கூறினார். இது ஏசிசியின் கோப்பை, எந்தவொரு தனிநபருடையதும் அல்ல” என்றார். இருப்பினும், ஏசிசி தலைவர் நக்வி இன்னும் கோப்பையை வழங்க ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.