India vs Pakistan: மீண்டும் IND – PAK போட்டி! வெற்றி வரலாற்றை தக்கவைக்குமா இந்திய அணி..? போட்டி எப்போது?
Women's Cricket World Cup: ஆண்கள் கிரிக்கெட்டைப் போலவே, பெண்கள் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சாதனை மிகவும் சுவாரஸ்யமாகவும், தோற்கடிக்க முடியாததாகவும் உள்ளது. அதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இதுவரை மொத்தம் 11 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

2025ல் ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை தொடர்ச்சியாக இறுதிப்போட்டி உட்பட 3 முறை தோற்கடித்தது. இதே ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றொரு பரபரப்பான போட்டி தயாராக உள்ளது. ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையில் 2025 அக்டோபர் 5ம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் இலங்கையின் கொழும்பு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோத இருக்கின்றன. இரு அணிகளும் இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. இதில், ஆச்சர்யப்படும் வகையில் இந்திய அணி, இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியே சந்தித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இந்திய மகளிர் அணி இந்த முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து புதிய சாதனையை படைக்கும் நோக்கில் களமிறங்கும்.
மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணியின் முதல் போட்டி எப்போது..?
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 விரைவில் தொடங்க உள்ளது. அதன்படி, முதல் போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி இந்திய மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையே குவஹாத்தியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
ALSO READ: மகளிர் உலகக் கோப்பை தொடர்.. போட்டி நடக்கும் இடங்கள் என்னென்ன தெரியுமா?




இருப்பினும், 2025 அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியின் மீது கிரிக்கெட் உலகம் முழுவதும் கவனம் செலுத்துகிறது. 2025 ஆசிய கோப்பையில் ஆண்கள் அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பிறகு, இப்போது பெண்கள் அணியும் இந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தயாராக உள்ளது. இந்தப் போட்டி இலங்கையின் கொழும்பில் பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறுகிறது.
பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவின் தோற்கடிக்கப்படாத சாதனை:
ஆண்கள் கிரிக்கெட்டைப் போலவே, பெண்கள் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சாதனை மிகவும் சுவாரஸ்யமாகவும், தோற்கடிக்க முடியாததாகவும் உள்ளது. அதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இதுவரை மொத்தம் 11 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 11 போட்டிகளிலும் இந்திய அணி முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் மகளிர் அணியின் கணக்கு இன்னும் காலியாகவே உள்ளது.
வருகின்ற 2025 அக்டோபர் 5ம் தேதி இரு அணிகளும் மீண்டும் மோதும்போது, இந்திய அணி தங்கள் அற்புதமான வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, 12-0 என்ற கணக்கில் வரலாற்றை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு குறைந்த விலை டிக்கெட்.. ரசிகர்களை கவர ஐசிசி புதிய திட்டம்!
ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமை தாங்குவார் என்றும், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி ஷர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, ராதா யாதவ், அருண்ஜோத் ரெட்டி, அமன்ஜோத் ரெட்டி.
காத்திருப்பு வீரர்கள்: தேஜல் ஹசாப்னிஸ், பிரேமா ராவத், பிரியா மிஸ்ரா, உமா செத்ரி, மின்னு மணி, சயாலி சத்கரே